Tuesday, November 10, 2015

8. ஞாலத்துயிர் செய்திடுவான்(கால மகள் கண்திறப்பாள்)-NOT Recorded

(65-74)
ஈஸான: பராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: பிரஜாபதி:|
ஹிரண்ய கர்போ பூகர்போ மாதவோ மதுஸூதன: ||

ஞாலத்துயிர் படைத்துகாத்து உயிருமா யிருப்பவன்
காலத்துக்கே காலம்சொல்லி காலம்கடந்து நிற்பவன்
சீலம்கண்டு போற்றலாகக் கோலம்கொண்ட கோமகன்
புலத்திருந்து உயிர்களுள்ளே உய்யுகின்ற உயிரிவன்

தங்கவண்ணம் எங்கும்மின்னும் அங்கம்கொண்ட தூயவன்
எங்கும்உயிர்கள் தங்கும்புவியை காவல்கொண்ட தாயவன்
கோதில்லாத சாதுக்களின் செயலும்பலனும் ஏற்பவன்
மாதவத்தில் மகரிஷிகள் மனதைவைக்கும் மாதவன்
 
(கால மகள் கண்திறப்பாள்-ஆனந்த ஜோதி)
 
 
ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே
(2)

போற்றிட-நல் சீலம்-கொண்டான் கோமகனே
அவன் உலகில்-உயிர் உள்-திகழும் ஆத்துமமே

ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே
(MUSIC)

அங்கமெல்லாம் தங்கம்-மின்னும் என்னும்-வண்ணத் தூயவனே
காவலனாய்க் காத்திடுவான் தாயைப்-போலவே

(2)
(Short Music)
அறிவிலியின் கோதுகளும் அதன்-வழியாம் குற்றங்களும்
கொண்டிடாத-சாதுக்களின் செயலும்-நாரணன் அதன் பலனுமானவன்
செயல் பலனும்-நாரணன்
(Short Music)
ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே
(MUSIC).. ஆஆ..(SHORT MUSIC)

கத்திய-ஓர் யானைக்குத்-தன் கருணை-தந்த தெய்வம்
நாதியில்லாப் பேதைகட்கும் துணை-இருந்த தெய்வம்

(1+SM+1)
உள்ளுக்குள்ளே ஒளியாய் ப்ரணவ-சாட்சி ஒலியாய்
என்றைக்குமே இருக்கும்-தெய்வம் அந்த-நாரணன்
என்றும் உள்ள-பூரணன் அன்பே என்று-ஆனவன்

(Short Music)
ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே ..ஆ.. .. ஆ..


 









 
 


Thursday, November 5, 2015

7 உலகோரே நாரணன் போல் (பொறந்தாலும் ஆம்பளையா)

 
 
7. (56-64)
அக்ராஹ்ய: சாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: பிரதர்த்தந:
ப்ரபூத ஸ்த்ரிககுத்தாம பவித்ரம் மங்களம் பரம் ||
 புரிபடாத பொருளும்நீ முடிவிலாத ஏற்றம் நீ
கறைபடாத கொற்றம்நீ கருமை கொண்ட தோற்றம் நீ
சிவந்திருக்கும் தாமரை பழித்திருக்கு முன்விழி
அழித்துமூழில் நிற்பவன் அறிவில்சிறந்த விற்பனன்
*
உலகம்மூன்றின் காரணன் உணர்வுமூன்றின் பூரணன்
விளங்குதூய்மை கொண்டுமே தோன்றிநிற்கும் மங்கலன்
 *உலகம் மூன்று: பூ, விண், பாதாளம். உணர்வு மூன்று : ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்ன (கனவு), சுஷுப்தி (ஆழ் உறக்கம்)
________
 
( பொறந்தாலும் ஆம்பளையா )

உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு
சொல்வீர்
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு

(SM)
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு

(VSM)
புரிந்திடுமோ-நன்கு தெரிந்திடுமோ-சொல்லு அவன்-திருப்பீ..டு
எந்நாளும் ஓர்-முடிவிலா ஏற்றத்தைக்-கொண்டு இருப்பவன் பாரு

உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு
(MUSIC)

அவன்-திருத் தோற்றம் கறைபடுமோ
அவன்-எழில் தோற்றம் கருப்பெனுமோ
சிவந்திரும்-தாமரை நாணிடுமோ *அவனிருத் திரு-விழி கண்டி
டுமோ

சொல்லு
அவன்-திருத் தோற்றம் கறைபடுமோ
அவன்-எழில் தோற்றம் கருப்பெனுமோ
சிவந்திரும்-தாமரை நாணிடுமோ *அவனிருத் திரு-விழி கண்டி
டுமோ
அழித்துப்-பின் ஊழிலும் நிற்பவனே அஹ்ஹா 
அறிவினில்-சிறந்த விற்பனனே ஓஹ்ஹோ
உலகங்கள்-மூன்றின் காரணனே 
அஹ்ஹா 
 உணர்வுகள்-மூன்றின் பூரணனே ஓஹ்ஹோ
அழித்துப்-பின் ஊழிலும் நிற்பவனே 
அறிவினில்-சிறந்த விற்பனனே
உலகங்கள்-மூன்றின் காரணனே
 உணர்வுகள்-மூன்றின் பூரணனே
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு

(MUSIC)
தூக்கத்தி..லும்-அவன் விழித்திருப்பான்
விழிப்பிலும் யோகத்தின் துயிலுறுவான்
கனவெனும்-நிலையிலும் அவன் இருப்பான்
நினைவிலும் நிறைந்திடும் ஓர் பெருமான்..

இருக்கிற யாவிலும் உயர்வவனே
மரிக்கிற நிலையிலும் உயிர் அவனே
எரிகிற தீயிலும் குளிர்பவனே
உறைகிற குளிரிலும் இதம் அவனே
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு
 
 
 
 
 



Tuesday, June 30, 2015

பலஸ்ருதி-வேத மெய்ப்பொருள்(காதலின் பொன் வீதியில்)

 




 
“ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரா நனே”
                            -    ராம என்னும் ஒரு நாமம் சஹஸ்ரநாமப் பலனைத் தரும்
 
 
 
( காதலின் பொன் வீதியில் )
 
ஆ...ஓ..ஆ..
வேத மெய்ப்பொருள் ஆகுமே ராம்-எனும் ஓர் நாமமே
நெஞ்சே-நீ உருகிச் சொல்லேன்-பாழ் உன்-கேடு விலக்கித்தள்ளேன்
ராம்-எனும் ஓர்-நாமமே  ஆயிரம் பேராகுமே
என்றே அம்மகிமை சொன்னார் ராம் என்றே-நம் சிவபெருமான்
 (MUSIC)
 திருப்பாற்கடலில் துயில்-நாரணனே புவியாட வந்தான் அழகாக
அந்த ஓம் எனும்-தேன் தனை-ராம்-எனவே பெயர் கொண்டு வந்தான் நமக்காக
(Short Music)
அந்தப் பெயரினையே சொல்லத் தோன்றிடுமாம்
நான் என்றிடும்-மெய் மெதுவாக
என் நெஞ்சமே-நீ இனிச் சொல்லிடுவாய்
நிஜம் கண்டிடுவாய் அழகாக
 வேத மெய்ப்பொருள் ஆகுமே ராம்-எனும் ஓர் நாமமே
(MUSIC)
விழி ஊறிடவே உன் நாவினிலே ராம் ராம்-எனலே ஜபமாகும்
அந்தப் பெயரினிலே உள்ள பொருளுணர்ந்து
அதை உரைத்து விட்டால் சுபமாகும்
(SM)
ராம ஜபத்துடனே சேவை கையில்-கொண்டால்
அது வழங்கிடுமே பேரின்பம்
உந்தன் யாக்கை-எனும் ஒரு கவலையில்லை
இனி காலமெல்லாம் சாயுஜ்யம்
வேத மெய்ப்பொருள் ஆகுமே ராம்-எனும் ஓர் நாமமே
நெஞ்சே-நீ உருகிச் சொல்லேன்-பாழ் உன்-கேடு விலக்கித்தள்ளேன்
ஆ...ஓ..ஆ..
 
 


Monday, June 29, 2015

6. வார்த்தையால் ஆண்டவன் (மௌனமே பார்வையால்)

  
(46-55)
 அப்ரமேயோ ஹ்ரிஷீகேஸ: பத்மநாபோ மரப்ரபு: |
விஸ்வகர்மா மனுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்ட ஸ்தவிரோ த்ருவ: ||

உரைநடைக் குரைபடா திறைவரை யறைக்குறா
பொருள்அது மருள்வது களைந்திடும் அருள்அது
பிறைதரும் இதம்அது கதிர்தனில் ஒளிர்வது
உடல்எழும் மலர்தரும் உரம்தனில் வளர்புலம்
உயர்அகம் உறைஅமர் அவர்களின்தலை அது

பெயர்ந்திடா திருந்திருக்கு மண்டம் செய்தகோமகன்
உயர்வதான சிந்தனைக்கு மோர்தலை இவன்கலை
ஓய்வதாக வந்துயிர்  அடங்குகின்ற தானவன்
பெரிதினும் பெருத்தவன் ஆதியாய் நிலைத்தவன்

உடல்எழும் மலர் = நாபித் தாமரை , உயர்அகம் = விண்ணகம் ,
உறைஅமர்அவர் = உறைகின்ற அமரர்கள்

Click here to listen to
(மௌனமே பார்வையாய்)

 
*மானிடர் வார்த்தையால் இறை பெருமை சொல்லல்-ஆமோ  
யாருமே பார்வையால் வரையறுத்துச் கூறப் போமா
(1+sm+1)
 (MUSIC)
சந்திரப்-பிறை குளிர் தந்திடும்-இதம்-அவன்
அந்த சூரியனின் ஒளிதானே ஒளி-மாலே
(Short Music)
சந்திரப்-பிறை குளிர் தந்திடும்-இதம்-அவன்
அந்த சூரியனின் ஒளிதானே
என்றும் விளங்கும் அந்த நாபிக்கமலம்
மண்ணை போற்றிக் காத்திருக்கும் உரம் தானே
மண்ணை போற்றிக் காத்திருக்கும் அறம் தானே
சொல்.. மானிடர் வார்த்தையால் இறை பெருமை சொல்லல்-ஆமோ  
யாருமே பார்வையால் வரையறுத்து கூறப் போமா
 (MUSIC)
விண்ணவர்களின் உயர் மன்னன்-அவன்தான் -
பெய..ராத-அண்டம்-செய்த ஒரு பெருமான்.. ஹரி திருமால்
(Short Music)
விண்ணவர்களின் உயர் மன்னன்-அவன்தான் -
பெயராத அண்டம் செய்த ஒரு பெருமான்
என்றுமிருக்கும் அவன் **சிந்தை உணர்வே
பல உயிர்கள் அடங்குகிற மடியேதான்
அவன் பெரிதின் பெரிது என்ற  முடிபேதான்   
சொல்.. மானிடர் வார்த்தையால் இறை பெருமை சொல்லல்-ஆமோ  
யாருமே பார்வையால் வரையறுத்து கூறப் போமா
 
 
* விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்
** பேரானந்த உணர்வலை (Supra-conciousness)
 
 


5. தானே தன்னில் தோன்றிடுவான்(தாயில்லாமல் நானில்லை)


5. (37-45)
ஸ்வயம்பு சம்புராதித்ய புஷ்கராக்ஷோ மஹாஸ்வந :|
அநாதிநிதநோ தாதா விதாதா தாதுருத் தம: ||

தானேதன்னில் தோன்றுவான் தானுமான தம்பிரான்
காணும்கண்ணின் கண்ணிவன் அழகைமயக்கும் அழகிவன்
சூரியனின் ஒளியிவன் தாமரையின் விழியவன்
வேதம்சொன்ன நாயகன் முதலும்முடிவு மற்றவன்

படைத்திருக்கும் காரணன் படைப்பைக்காக்கும் நாரணன்
நடத்திசெயலைப் பார்ப்பவன் செயலும்பலனும் ஆனவன்
படைப்பதான பிரமனையும் படைத்திருக்கும் படியிவன்
உடைபடாத அணுவினுள்ளே அணுவதான ஆண்டவன்
(தாயில்லாமல் நானில்லை)

 
தானே-தன்னில் தோன்றிடுவான் தன்-மயமாகி நின்றிடுவான்
தனக்கு இணை இல்லாதான் என்றிட-அவனே தனித்திருப்பான்
(2)
தானே-தன்னில் தோன்றிடுவான்
(MUSIC)
காணும் கண்ணின் கண்ணாம் 
அவன் அழகை மயக்கும் அழகாம்
(2)
சூரியன் ஒளியாம் தாமரை விழியான்
வேதத்தின் வித்தகன் தலைவனுமாம்
(2)
என்றும் தானே-தன்னில் தோன்றிடுவான்
(MUSIC)
ஆதியந்தமும் இல்லான் அவன் தானாய் எதையும் படைப்பான் (2)
படைத்ததைக்-காத்து ... 
செயல்பட-வைத்து..
படைத்ததைக்-காத்து செயல்பட-வைத்து
செயலும்-பலனும் ஆகிடுவான்
தானே-தன்னில் தோன்றிடுவான்
(MUSIC)
உலகினை பிரமன் படைப்பான்
அந்த பிரம்மனையும் இவன் படைப்பான்
(2)
அண்டத்தைப் படைப்பான் அதனிலும் நிறைவான்
அணுவினுக்கணுவாய் அவன் இருப்பான்
(2)
தானே-தன்னில் தோன்றிடுவான்+ (MUSIC)
ஜோதி வடிவினன் அவன் தான்
எங்கும் நிறையும் ப்ரணவமும் அவன் தான்
(2)
அனைத்திலும் இருப்பான் ஆனந்தம் அளிப்பான்
அவன்-தாள் சேர்வது தான்-முக்தி
(2)
என்றும் தானே-தன்னில் தோன்றிடுவான் தன்-மயமாகி நின்றிடுவான்
தனக்கு-இணை இல்லாதான் என்றிட-அவனே தனித்திருப்பான்
தானே-தன்னில் தோன்றிடுவான்

3 & 4 யோகம் பிறந்தது(உலகம் பிறந்தது எனக்காக) (25-45)

 
 
(18-24)
யோகோ யோக விதம் நேதா பிரதான புருஷேச்வர:|
நாரசிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ புருஷோத்தம: ||


யோகம்தன்னில் உதிப்பவன் யோகம்கூட உதவுவான் லோகம்தன்னில் தலையவன் சிம்மத்தலையில் தோன்றுவான்
திருமகளின் துணையவன் சுருண்டகுழலில் அழகிவன்

பிறந்திருக்கு மேழுலகின் சிறந்ததொரு நாயகன்
 (25-36)


ஸர்வ: ஸர்வ: சிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யாய:
சம்பவோ பாவனா பார்த்தா பிரபவ: பிரபுரீச்வர:

யாதுமாக நின்றுஊழில் யாதும்போக சென்றழித்து தூய்மையாகி யேதிடத்து நின்றிருக்கு முன்னிடத்து
ஓய்ந்திடாத தோர்திறத்து தோன்றுகின்ற உயிர்கள்சென்று
ஓயுகின்ற தோரிடத்தின் ஊழினுள்ளு மேஇருந்து

நிகழ்வதில் லிருந்திருந்த ளிப்பதில்ம கிழ்ந்திருந்து
விழைவுடன்ப டைத்திருந்த னைத்துமிங்கு காத்துநின்று
பிழைபடா துடைதிறத் துடைத்துநின் கொடைகொடுத்து
குறைபடா தளிக்கும்நீயும் மன்னர்மன்ன னல்லவோ..!

** பழுதற்ற முழுமையான அறிவுடைய இவன், தீமைகளை உடைத்து , வேண்டுவன கொடுத்து வேண்டுவன அற்ற மன்னனானவன்.


( உலகம் பிறந்தது எனக்காக )

 
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
லோக-நாதனும் நீ தானே அந்த ஹரி-நர..சிம்மனும் நீ தானே
  யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே (2)
லோக-நாதனும் நீ தானே அந்த ஹரி-நரசிம்மனும் நீ தானே
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
(MUSIC)
சுருண்ட-குழலின் அழகினிலே மயங்கிக் கிடந்தாள் திருமகளே
 உலகம்-ஏழினை படைத்தவனே
படைத்த அனைத்தையும் காப்பவனே
 (2)
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
(MUSIC)
யாதும் நீயாய் ஆகிவிடும் காக்கும் தாயாய் உனது மனம்
தூய்மை வாழும் இடமாகும் உனது மனமே  திடமாகும்  (2)
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
(MUSIC)
நன்றாய்-ஓய்ந்தே கிடந்தாலும் விண்ணை-மண்ணைக் காத்திருக்கும்
அன்னை வடிவே உன்ரூபம் நீயே ஊழியின் ஆனந்தம் (2)
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே (2)
லோக-நாதனும் நீ தானே அந்த ஹரி-நரசிம்மனும் நீ தானே
  யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
 
 
 

2. எங்கும்-எதிலும் உள்ள ரசம் நீ (செல்லக் கிளியே மெல்லப் பேசு) (10-17)

 

2. (10-17)
 
பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி: |
அவ்யய புருஷ சாக்ஷி ஷேத்ரக்ஜ்ஞோ க்ஷர ஏவ ச:

எதிலுமுள்ள ரசமும்நீ ஆத்துமத்தி னுள்ளும்நீ
செல்லுமுயிர் முடிவதாக உள்ளுகின்ற இடமும் நீ
கொல்லுகின்ற படியிலாத இணையுமிலாப் புருடனே
இடமறிந்த மாட்சிநீ அழிவிலாத சாட்சிநீ

________________________________________
 


( செல்லக் கிளியே மெல்லப் பேசு )
 
 
எங்கும்-எதிலும் உள்ள ரசம் நீ
ஆத்துமத்திலே உள்ள நிஜம் நீ
(2)
(MUSIC)
உன்னில் பல்..லுயிர் பிறந்திடுமே
மீண்டும் உன்..மடி அடைந்திடுமே
(2)
எங்கும் எதிலும் உள்ள ரசம் நீ
ஆத்துமத்திலே உள்ள நிஜம் நீ
ஆத்துமத்திலே உள்ள நிஜம் நீ
 (MUSIC)
என்றும் உனதிருப்பு எல்லாம் உனது-சொத்து
செல்லும் உடல்-உனக்கு இல்லை பெருமா..!
 (1+Short Music+1)
எங்கும் இடம்-கடந்த செல்லும் அழிவு-வென்ற
மொத்தம்-மு..ழுதும்-ஆனந்..தம்-உன் உரு..வாம்
எங்கும் எதிலும் உள்ள ரசம் நீ
ஆத்துமத்திலே உள்ள நிஜம் நீ
ஓம் ஓம் ஓம் ப்ரம்ம நம 
ஓம் ஓம் ஓம்  பரம நம
 
 
 
 


Friday, June 26, 2015

விஷ்ணு சஹஸ்ரநாமப் பாடல்கள்


  7. நாரணன் போல் தெய்வம்(திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்) -- (46-55)
  7. உலகோரே நாரணன் போல் (பொறந்தாலும் ஆம்பளையா) -- (56-64)  (Not recorded)
  8. லோகத்தைப் படைப்பவனே(கேட்டதும் கொடுப்பவனே)  -- (65-74)
  9. நெஞ்சில் தைரியமும்(நெஞ்சில் குடியிருக்கும்) -- (75-85)
10. எண்ணிலா கடவுளர்க்கும் (வெண்ணிலா நேரத்திலே) -- (86-95)
11. தொன்று தொட்டு அகலாத ஒன்று(எண்ணிரண்டு பதினாறு வயது) -- (96-104)
12. காலைத் தாமரை விழியில்(காதல் ராஜ்ஜியம் எனது) -- (105-114)
13. அவனுக்கு இல்லை ஒரு பிறப்பு(மலர்களிலே பல நிறம் கண்டேன்) -- ( 115-123)
14. எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே(எண்ணப் பறவை சிறகடித்து) -- (124-134)


1. இதோ இந்த உலகமாக(அதோ அந்த பறவை போல) (1-9)


 
1. (1-9)
விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத் பிரபு:
பூதக்ருத் பூத்ப்ருத் பாவோ பூதாத்மா பூத பாவன :
 
 அண்டமாய்ப்பே ரண்டமாய் தோன்றுதேவி ராடமாய்

இடம்விடாத ஒன்றுமாய் விளங்குகின்ற தெங்குமாய்

கண்டுகொள்ள தொண்டரால் பண்ணிசைக்கும் சின்னமாய்

நேற்றுமின்று நாளையாய்ப் போற்றுகின்ற ஒன்றுமாய்

தோற்றிஉயிரைப் பேணுவான் பெற்றபிள்ளை போலவே

உற்றுமதனில் வாழுவான் உள்ளினுள்ளு மாகவே

கிடந்தசைந் திருப்பவன் அனைத்தினுள்ளு மேயவன்

படைத்தயாவும் தோன்றவளரக் காரணமே தானவன்
______________
 
 
( அதோ அந்த பறவை போல )
 
 
இதோ இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன் (2)
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
(SM)
இதோ இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன் 
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
(MUSIC) 
லாலாலா லா..
(SM)
நேற்று-இன்று நாளை-என்ற கணக்கில்-மாலனே
இலன் என்ற உணர்வில்-நாமும் திளைக்க வேண்டுமே
திளைக்க வேண்டுமே
காலம்-என்ற கட்டுக்குள்-இ..றைவன் இல்லையே
பாடிப்-போற்ற சின்னமாகும் அவனின் மேன்மையே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்

இதோ-இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ-அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே-ஆன்மம் ஆன-பரமன் தானவன்
 (MUSIC)
லாலாலா லா
(MUSIC)
தோற்றி-உயிரைப் பிள்ளை-போலப் பேணும்-நெஞ்சிலே
அவனுக்கீடு சொல்ல-ஒன்று எங்கும்-இல்லையே
எங்கும்-இல்லையே
வாழ்க்கை-என்று அவனுக்கென்று ஒன்று-இல்லையே
உயிரில்-வாழ்க்கை அவனை-அன்றி நடப்பதில்லையே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
இதோ இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
 (MUSIC)
லாலாலா லா 
(MUSIC)
 கோடி-வகையில் உயிர்கள்-தோன்ற வைக்கும் அவன்-கலை
கோவில்-தோறும் தோற்ற..மாகும் அவனின் பலசிலை
அவனின் பலசிலை
அசைவு-இன்றிக் கிடக்கும் அவனின் யோகப் பெருநிலை
  அவனிலாமல் அசைந்திடாது சின்னஞ்சிறு இலை
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
இதோ-இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ-அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்