Sunday, January 2, 2022

21. திருமகள் நாதன்(மலருக்குத் தென்றல்)

Aalaabanai
(SM)
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு

அலைமகள் நாதன் அருட்பேரு அதன் பொருள் அறிந்துரைத்தல் பெரும்பேறு

(MUSIC)
உறுதியில் நிலைக்கும் அவன்-மேரு அவன் தரையில் பாய்ந்திடும் பேராறு (2)
படைத்ததில் எதுவும் அவன் சாறு எங்கும் அவனுக்கு உண்டோ ஒரு நேரு
சிறப்புறச் சொல்வோம் அவன் பேரு என்றும் அதற்கிணை எங்கும் கிடையாது   
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு
(MUSIC)
உருவங்கள் ஏதும் இல்லானே என மாலனை மறைகள் சொல்கிறது (2)
அவன் திருப்பேரே இலையானால் அந்த மாலனை நாம் சொல்ல முடியாது 
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு
(MUSIC)
கண்ணுக்கு மாலன் தெரியானே என பெயரால் உணர்ந்திடு நீ என்று
விண்ணுக்கு ஏகும் முன்னாலே இதைத் தந்த நல் பீஷ்மரைப் பணி நன்கு 
(sm)
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு
அலைமகள் நாதன் அருட்பேரு அதன் பொருள் அறிந்துரைத்தல் பெரும்பேறு
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு

முதல் பக்கம்

No comments:

Post a Comment