Wednesday, July 27, 2016

10. எண்ணிலா கடவுளர்க்கும் (வெண்ணிலா நேரத்திலே)



( வெண்ணிலா நேரத்திலே ) 


(86-95)
ஸுரேஸ ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: பிரஜாபவ: |
அஹஸ்ஸம்வத்சரோ வ்யாள ப்ரத்யய: ஸர்வதர்ஸந: ||

கடவுளுக்குள் கடவுள்நீ சரணம்கொள்ளும் பொருளும்நீ
அடையும்-துரிய நிலையும்நீ  விரியும்-வெளியின் விதையும்நீ
பிறக்கும்-யாவும் உன்திறம் அடைக்கலமும் உன்னிடம்
சிறக்கச்-செய்வாய் பக்தரை மறுத்து-நீயும் வெறுத்திடாய்
விரைந்துமே கொடுப்பவன் நம்பிக்கைக்குப் பாத்திரன் 
உறைந்து-பார்த்..திருப்பவன் பார்வையாய் இருப்பவன்


எண்ணிலா கடவுளர்க்கும் கடவுள்-நீயே
அவர்-சரணம் கொள்ளும்-நல்லப் பொருளும்-நீயே
(2)
கண்ணா .. கண்ணா 

எண்ணிலா கடவுளர்க்கும் கடவுள்-நீயே
அவர்-சரணம் கொள்ளும்-நல்லப் பொருளும்-நீயே

(MUSIC)

வானம் விளங்கும்-ஓம் என்னும்-பாட்டு
கேட்டு தோற்றம்-அளிக்கும் துரியம் உந்தன்-மூச்சு
(2)
ன்னை மிஞ்சும்-திறமை எங்கும் உண்டா 
உந்தன் சரணங்களை விடவும் எதுவும் நன்றா
கண்ணா…
எண்ணிலா கடவுளர்க்கும் கடவுள்-நீயே
அவர்-சரணம் கொள்ளும்-நல்லப் பொருளும்-நீயே
(MUSIC)

பக்தரைப் போற்றுவாய் தேடி-வினையாற்றுவாய் (2)
வந்து-கொடுத்தாளுவாய் நம்பிக்கைக்கு மாலனாய் (2)
இருட்டிலும் பார்த்திடும் பார்வை
யும் நீ தான் 
பார்த்துக் காத்திடும் அந்த ஆத்துமமே தான் 
 பரம ஆத்துமம் நீ தான்

எண்ணிலா கடவுளர்க்கும் கடவுள்-நீயே 
அவர்-சரணம் கொள்ளும்-நல்லப் பொருளும்-நீயே

(2)


முதல் பக்கம்


9. நெஞ்சில் தைரியமும்(நெஞ்சில் குடியிருக்கும்-இரும்புத் திரை)



(75-85)
ஈஸ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவி விக்ரம: க்ரம:|
அநுத்தமோ துராதர்ஷ: கிருதஜ்ஞ: கருதிராத்மவான்||

வீரியத்தில் பெரிதவன் தைரியத்தில் உறைபவன்
வீரத்திலே வில்லெடுத்து காரியத்தை முடிப்பவன்
மறதியற்ற திறத்திலிவன் மறதிமறந்து மிருப்பவன்
சிறுத்தவொரு சீரடியில் வானளந்து நின்றவன்
சீர்ப்படுத்தி நேர்நிறுத்தி பார்நடத்தும் கோனவன் 

நேருமற்று எதிருமற்று இணையிலாமல் உயர்ந்தவன்
நேரிலாத தீமையாவும் கூர்படவே கிழிப்பவன்
ஊரும்விழி பக்திசெய்ய நன்றியாகக் கொள்பவன்
சேரும்பழி வந்திடாத நற்செயலில் தூண்டுவான்
கூறுமடி யார்கள்வானில் அரசுமாளச் செய்யுவான்

Click here to listen to the Song
( நெஞ்சில் குடியிருக்கும்-இரும்புத் திரை )

ஓ  .ஆஆ 
நெஞ்சில் தைரியவான் அளவற்ற வீரியவான் (2)
அவனைச் சொல்லச் சொன்னால் முடியுமா
அவனைச் சொல்லச் சொல்லால் முடியுமா
அவனைப் புரிந்து-சொல்ல முடியுமா
சொல் அவனைப் புரிந்து-சொல்ல முடியுமா
கையில் வில்லெடுத்து காரியத்தை முடிப்பவனை (2) 
எளிதில் சொல்வதென்ன முடியுமா
சொல்லில் சொல்வதென்றால்  முடியுமா
அவனை எடுத்துச் சொல்ல முடியுமா
சொல்.. அவனை எடுத்துச்-சொல்ல முடியுமா
(MUSIC)

தன்னின் உணர்வுகொண்டு அம்மறதி தன்னை-வென்று ஆஆஆ..
தன்னின் உணர்வுகொண்டு அம்மறதி தன்னை-வென்று
நேரும் எதிருமின்றித் திகழ்-திருமாலன் (2)
தன்-சிறுத்தச் சீரடியில் உள்ளதெல்லாம் அளந்துவிட்டு ..ஆஆஆ..
ஒன்றிரண்டு ஈரடியில் உள்ளதெல்லாம் அளந்துவிட்டு 
ஒன்றும் தெரியாதவன் போல் மூன்றெங்கு என்றான்
தானிரண்டு அடியெடுத்து உள்ளதெல்லாம் அளந்துவிட்டு
ஒன்றும் தெரியாதவன் போல் மூன்றெங்கு என்றான்
நெஞ்சில் தைரியவான் அளவற்ற வீரியவான்
அவனைச் சொல்ல-சொல்லால் முடியுமா
அவனைப் புரிந்து-சொல்ல முடியுமா
சொல் ..அவனைப் புரிந்து-சொல்ல முடியுமா
கையில் வில்லெடுத்து காரியத்தை முடிப்பவனை
எளிதில் சொல்வதென்ன முடியுமா
அவனை எடுத்துச் சொல்ல முடியுமா
சொல் அவனை எடுத்துச்-சொல்ல முடியுமா
(MUSIC)

அழகுறச் சீராக்கி முறைப்படப் பார் நேராக்கி (2)
தீமை தனைப்-போக்கும் அவன்-நாரணன் தானோ (2)
பொழிந்திடும் அருளின்-மழை கிடைக்கும்-வானில் அரசர்-அணை (2)
அடியவர் தான் கேட்டால் மறுத்திடுவானோ 
பக்தியின் விழிநீரை மறந்திடுவானோ
நெஞ்சில் தைரியவான் அளவற்ற வீரியவான்
அவனைச் சொல்ல-சொல்லால் முடியுமா
அவனைப் புரிந்து-சொல்ல முடியுமா
சொல் .. அவனைப் புரிந்து-சொல்ல முடியுமா
கையில் வில்லெடுத்து காரியத்தை முடிப்பவனை
எளிதில் சொல்வதென்ன முடியுமா
அவனை எடுத்துச் சொல்ல முடியுமா
சொல் ...அவனை எடுத்துச்-சொல்ல முடியுமா


___________________________________________



( வெண்ணிலா நேரத்திலே ) 


சொல்லவா மாலனவன் பெருமை நானும் 
நான் கூறி முடிக்கக் கோடி காலம் வேணும்
(2) 
ஆஹா..(2)
சொல்லவா மாலனவன் பெருமை நானும் 
நான் கூறி முடிக்கக் கோடி காலம் வேணும்
(MUSIC)
எண்ணி முடிக்கும் வீர்யவானாம் 
தேடித் தீமை ஒழிக்கும் தைர்யவானாம்
(2)
கையில் வில்லெடுத்து நிற்கும் ராஜா 
அவன் தோள்களிலே தூங்கும் ஏழு பூமி
ஆஹா..(2)
சொல்லவா மாலனவன் பெருமை நானும் 
நான் கூறி முடிக்கக் கோடி காலம் வேணும்
(MUSIC)
வில்லெடுத்த வீரவான் காரியத்தில் சூரனாம் 
(2)
விண்ணளக்க வாமனன் சின்ன அடி போதுமாம்
(2)
கூறுமா மாலனை என் கவி நல்லா 
தோண்ட ஊறுமா என்வழிச் செம்மொழி சொல்லா
என்வழிச் செம்மொழி சொல்லா
சொல்லவா மாலனவன் பெருமை நானும் 
நான் கூறி முடிக்கக் கோடி காலம் வேணும்
(2)