Sunday, December 12, 2021

x2. நன்கு மனதில்(தென்றலோடு உடன் பிறந்தாள்)

 

ஆ..

(VSM)
நன்கு மனதில் பதிந்து நின்று நிலைத்திடுமாறு
(VSM)
திருப்பெயரைப் பொருள்-புரிந்து உணர்ந்திடுமாறு
(VSM)
கேட்கையிலே விழி சுரந்து ஓடிடுமாறு
(VSM)
உரைத்திடுவோம் பக்தரெல்லாம் கேட்டிடுமாறு 
(VSM)
மனம் களித்திடுமாறு 
(VSM)
நன்கு மனதில் பதிந்து நின்று நிலைத்திடுமாறு
அவன் திருப் பெயரைப் பொருள்-புரிந்து உணர்ந்திடுமாறு
(2)
(SM)
கேட்கையிலே விழி சுரந்து ஓடிடுமாறு (2)
உரைத்திடுவோம் பக்தரெல்லாம் கேட்டிடுமாறு (2)
மனம் களித்திடுமாறு 
கருவரையில் உயிர் இருந்து பிறப்பதற்கும் 
(VSM)
சிறு-இலையும் சலசலத்து அசைவதற்கும் 
(VSM)
கல்லிருக்கும் தேரை உணவு பெறுவதற்கும்
(VSM)  
காரணமே திருமாலின் அருளாகும் திரு அருளாகும்
(VSM)
கருவரையில் உயிர் இருந்து பிறப்பதற்கும் 
சிறு-இலையும்  சலசலத்து அசைவதற்கும்
(VSM) 
கல்லிருக்கும் தேரை உண்டு வாழ்வதற்கும் (2) 
காரணமே திருமாலின் அருளாகும் 
ஒரே காரணமே திருமாலின் அருளாகும் திரு அருளாகும்
(VSM)
உலகமெல்லாம் படைத்து-அந்த பாற்கடலில்
(VSM)
பொன் மேனி ஒளி வீச ஸ்ரீதரனாய்
(VSM)
அழகுடனே பாம்பணையில் புன்னகைத்தே
(VSM)
உறங்காது உறங்குகிறான் மாலவனே நம் மாலவனே 
(VSM)
உலகமெல்லாம் படைத்து-அந்த பாற்கடலில்
பொன் மேனி ஒளி வீச ஸ்ரீதரனாய்
அழகுடனே பாம்பணையில் புன்னகைத்தே ஆ ..
அழகுடனே பாம்பணையில் புன்னகைத்தே
உறங்காது உறங்குகிறான் மாலவனே
உறங்காது உறங்குகிறான் மாலவனே நம் மாலவனே


x1. மாலன் பேரே(பாட்டும் நானே)

 

மாலன் பேரே கூறிடல் பேறே (2)
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே 
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே
(MUSIC)

ஊழின் வினையும் மாயம் தனையும்  
ஓட்டும் என்றிட வழி ஒன்று வேறேதோ...ஓ..
ஊழின் வினையும் மாயம் தனையும்  
ஓட்டும் என்றிட வழி ஒன்று வேறேதோ
மாலன் பேரே கூறிடல் பேறே
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே 
 (MUSIC)

அதையும்
(VSM)
இதையும் 
(VSM)
நினைக்கும் நெஞ்சே  
அதையும் இதையும் நினைக்கும் நெஞ்சே
மாலன் பெயரை ஒரு முறைக் கூறேன் 
அதையும் இதையும் நினைக்கும் நெஞ்சே
மாலன் பெயரை ஒரு முறைக் கூறேன்
எனவே பெரியோர் சொன்னார் தானே (2)
என்பதைக் கேளாய் அலையும் மனதே  
(Pause)
நா உரைத்தால் விளங்கும் பதில்கள் எல்லாமே 
(SM)
அறிவால் புரியாத ஆச்சர்யம் அதுதான்
நா உரைத்தால் விளங்கும் பதில்கள் எல்லாமே
அறிவால் புரியாத ஆச்சர்யம் அதுதான்
ஆகையாலவனின் திவ்ய நாமங்களைக் கூறலாக மனம் ஆகலாக திரு  
மாலன் பேரே கூறிடல் பேறே
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே 
(ஸ்வரம்)
....
.....

மாலன் பேரே கூறிடல் பேறே


முதல் பக்கம்


Friday, December 10, 2021

20.பார் காணவே(பூமாலையில் ஓர் மல்லிகை)

 

ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
உன்னைப் பாடி பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
தர்மர் கேட்டு பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
(MUSIC)

உந்தனைப் போல் ஒரு ஞானியின் ஞானி.. ஆ..ஆ..ஆ..ஆ
எங்குமுண்டோ அதைச் சொல்லிடுவாய் நீ .. ஆ..ஆ..ஆ..ஆ
உந்தனைப் போல் ஒரு ஞானியின் ஞானி
எங்குமுண்டோ அதைச் சொல்லிடுவாய் நீ 
சுவை தேன் விழுதே முழுதின் முழுதே (2)
சுவைத்தால் கரும்பே அதில்-நான் எறும்பே (2)
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
உன்னைப் பாடி பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
(MUSIC)

அம்பினில் தோன்றிடும் உன்னுயர் வீரம்  ..ஆ..ஆ..ஆ..ஆ
தென்படுமோ அதில் புவிதனில் பாவம்..ஆ..ஆ..ஆ..ஆ
அம்பினில் தோன்றிடும் உன்னுயர் வீரம்  
தென்படுமோ அதில் புவிதனில் பாவம்

திருவின் தரனே அவளின் வரனே
திருவின் தரனே அருளும் வரனே 
உயர்ந்தோர் முயன்றே அடையும் சரணே (2)
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
உன்னைப் பாடி பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
உந்தன் பேர்கள் தேன் போன்றது
 (BOTH)

முதல் பக்கம்


19. எத்தனையோ இன்பம்(முத்துக்களோ கண்கள்)

 19. (175-182)

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹா ஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸயவபுஸ் ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத்: ||

தலைசிறந்த அறிவுநீ  அனைதினுள்ளும்  சாரம்நீ
குலைந்திடாத சக்திநீ அணைந்திடாநல்  சோதிநீ
விளக்கவொண்ணா   தோற்றம்நீ  குறைந்திடாத திருவும்நீ
அளக்கவொண்ணா   சாரம்நீ நிலைத்திருக்கும் மலையும் நீ

எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே
எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே
விளக்கவொண்ணா உரு என்றென்றும் மறுக்கலாகா ருசு 
அளக்க எண்ணிக்கை ஏதுமில்லா விளங்கும் சார மது 
எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே
(MUSIC)

சிறந்த ஞானம் அனைத்தின் சாரம் நிலைத்த மாலவன் நீ 
சிறந்த ஞானம் அறிவின் சாரம் நிலைத்த மாலவன் நீ 
நிறைந்த உரமும்  வளரும் திருவும் உடைத்த கோமகன் நீ  
மலையின் மாண்பினனே எந்நாளும் எரியும் ஆதவனே 
எனினும் விழிநீரே போதும் உன்னை அடைவதற்கே
எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே
(MUSIC)

நூறின் நூறு பெயரின் சீரு நீயும் கொண்டதென்ன (2)
அவைகள் கூறும் மனதில் ஆறு பக்தி ஆனதென்ன 
அவற்றில் ஒன்றே ஒன்று எப்போதும் போதும் என்பதனை 
ஈசன் பார்வதி கூறக் கேட்டோம் அதற்கு மேலும் என்ன 
எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே

முதல் பக்கம்


Thursday, December 9, 2021

7. நாரணன் போல் தெய்வம்(திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)

7. (56-64)
அக்ராஹ்ய: சாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: பிரதர்த்தந:
ப்ரபூத ஸ்த்ரிககுத்தாம பவித்ரம் மங்களம் பரம் ||
 புரிபடாத பொருளும்நீ முடிவிலாத ஏற்றம் நீ
கறைபடாத கொற்றம்நீ கருமை கொண்ட தோற்றம் நீ
சிவந்திருக்கும் தாமரை பழித்திருக்கு முன்விழி
அழித்துமூழில் நிற்பவன் அறிவில்சிறந்த விற்பனன்
*
உலகம்மூன்றின் காரணன் உணர்வுமூன்றின் பூரணன்
விளங்குதூய்மை கொண்டுமே தோன்றிநிற்கும் மங்கலன்
 *உலகம் மூன்றுபூவிண்பாதாளம். உணர்வு மூன்று : ஜாக்ரத் (விழிப்பு)ஸ்வப்ன (கனவு)சுஷுப்தி (ஆழ் உறக்கம்)
________

நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு
(2)
(MUSIC)
அவனின் நிஜம் என்றும் புரியாது அவன் மேன்மைக்கு ஒரு போதும் முடிவேது (2)
நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு
(MUSIC)
கறைகள் படாதிருக்கும் அவன் கொற்றம்-ஆழ்
கருமை நிறம் அன்றோ அவன் தோற்றம் 
(2)
சிவந்திருக்கும் கமலம் அவனின் விழி (2)
தூய்மை விளையாடும் நன் மங்கலம் அவனின் வழி (2)
நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு
(MUSIC)
பிறப்பிறப்பே இன்றி வாழ்கிறவன் அவன் ஊழியில் உலகழிந்தும் நிலைக்கிறவன் (2)
எழிலான மூவுலகின் காரணனே-அய்யன் 
எழிலான மூவுலகின் காரணனே-மூன்று 
உணர்வான அவன் என்றும் பூரணனே 
மூன்று உணர்வான அவன் என்றும் பூரணனே
நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு
அவனின் நிஜம் என்றும் புரியாது அவன் மேன்மைக்கு ஒரு போதும் முடிவேது 
நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு


 முதல் பக்கம்

18. மலர்ந்த முகம்(ஆயர்பாடி மாளிகையில்)


18. (165-174)
வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோ த்ஸாஹோ மஹாபல: ||

அறியஉரிய  கருத்தவன்   நோய்கள்முறிய  மருத்துவன்
என்றும்யோகம் கொள்பவன் சமரில்வெற்றி கொள்பவன்
நின்றஞானக் குன்றவன் தின்றபொருளில் இனிப்பவன்
புலன்கள்ஓயக் கடப்பவன் உலகமாயை துடைப்பவன்
மலர்ந்தமுகத்தின் ஆர்வலன் மிகுந்தான ஓர்பலன்*



மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன் பேரெழிலைக் காணீரோ
(sm)
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன் பேரெழிலைக் காணீரோ 
அவன் ஆழ்ந்தறிய கருத்தினனே நோய் முறிய மருத்துவனே 
ஓடிவந்து இங்கிவனைக் காணீரோ தேடிவந்து பேரிதத்தைக் காணீரோ
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன் பேரெழிலைக் காணீரோ
(MUSIC)

தின்னத் தின்ன இனிப்பதுவாய் புலனின்-வலி  முறிப்பதுவாய்
உலகமாயைக் கடக்கச் செய்வான் காணீரோ
(2)
என்ன மந்திரமோ தெரியவில்லை மாயங்களும் புரியவில்லை
நம் பவமே போகுதம்மா காணீரோ பவ பயமே ஓடுதம்மா வாரீரோ    
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன்... பேரெழிலைக் காணீரோ
(music)

யோகமதைக் கொண்ட அவன்  யோகமதில் தெரிந்திடுவான் 
வேகமென யோகமதைப் பூணீரோ
யோகமதைக் கொண்ட அவன்  யோகமதில் தெரிந்திடுவான் 
தாமதமேன் யோகமதைப் பூணீரோ
அவன் ஆயிரத்தின் நாமம் அதில் ஒன்றிரண்டே போதுமதன் 
பொருளறிந்தே உரைத்திடவே வாரீரோ 
பொருளறிந்தே பொருளுணர வாரீரோ 
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன்... பேரெழிலைக் காணீரோ
(music)

வாழ்க்கையொரு போர்க்களமே அனுதினமும் அமர்க்களமே
அண்ணலிடம் பலம் பெறவே வாரீரோ
(2)
அவன் வெஞ்சமரை வெல்லுபவன் மிகுந்ததான வலிவுள்ளவன்
யானை பலம் அவன் பலமே காணீரோ ஞானமலை அவன் எனவே காணீரோ 
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன் பேரெழிலைக் காணீரோ
மாலனவன் பேரெழிலை...க் காணீரோ 

முதல் பக்கம்


17. அருள் தரும் அய்யனை(சரவணப் பொய்கையில்)

 


17. (153-164)
உபேந்த்ரோ வாமந:பராம்ஸுரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்கரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||


இந்திரனுக் கிளையவன் அவனுக்கும்-மே..லானவன்
சிறுவனான வாமனன் பரமபுருஷ னானவன்
சிறந்தநோக்கம் கொண்டவன் நோக்கிடவே தூயவன்
விரிந்ததொரு வீரியத்தில் முடிவில்லாத மாயவன்
தானேதன்னில்  தோன்றுவான் தன்னில்யாவும் கொள்ளுவான்
தானுமான தம்பிரான்  நியமம்செய்தி டாதிரான்
தன்னிகரும் ஒன்றிலாத நிருவகிக்கும் ஓர்பிரான்


அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(SM)
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ

அவனுக்கு ஈடாய் வேறேதோ (2)
 அந்தக் கோமகன் மேலுமோர் கோனேதோ
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

அவனுக்கு மூத்தவன்தான் இந்திரனே ஆனால் 
அவனுக்கும் மாதவன் தான் கோமகனே
நோக்கினில் நல்ல அண்ணல் வாமனனே 
எந்த நாளிலும் அவன் தனி  ஆண்மகனே 
ஓ...ஓஓஓ.. (2)
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

நியமங்கள் செய்யும் நல்ல தூயவனே அவன் அந்தமில்லாத ஒரு மாயவனே (2)
தன்மய..மாய்த் தானே  தோன்றிப்-பின்னே
தன்மய..மாய்த் தானே  தோன்றிப்-பின்னே-அந்த வீரியன் தன்னிடம் யாவும்-கொள்வான்  
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
அவனுக்கு ஈடாய் வேறேதோ (2)
 அந்தக் கோமகன் மேலுமோர் கோனேதோ
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ


முதல் பக்கம்


15. ஒரே தேவன்(ஒரே பாடல் உன்னை அழைக்கும்)

15. (135-142)
லோகாத்யஷஸ் ஸுராதயஷோ தர்மாத்யஷ:கருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்த்ம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: ||

உலகனைத்தின் நாயகன் தேவர்கணக் கோனவன்
அறத்துக்குமே அறமவன் அனைத்துக்குமே அரசவன்
பிறந்ததுவும் பிறப்பித்ததும் ஆகும்புருஷன் தானிவன்
உணர்வுநான்கின் காரணன் தோற்றம்நான்கில் பூரணன்
சினப்பல்வினையைப் போக்குமாம்  புஜங்கள்நான்கு காக்குமாம்


ஆ..
ஒரே தேவன் என்றே அழைக்கும்
உன்னை வேதம் ஒன்றே உரைக்கும்
ஒரே தேவன் என்றே அழைக்கும்
உன்னை மன்னன் என்றே உரைக்கும்
ஒரே தேவன்
(Music)

நான்கு உணர்வும் உன்னில் உதிக்கும் 
உயிரும் ஜடமும் உன்னில் இருக்கும்
(2)
நீயே உணர்வு நீயே வடிவு
நீயே உணர்வு நீயே முடிவு
உன்னை அடைந்தால் உண்டோ பிறப்பு 
உந்தன் புஜம்தான் எந்தன் சிறப்பு 
ஒரே தேவன் என்றே அழைக்கும்
உன்னை மன்னன் என்றே உரைக்கும்
ஒரே தேவன்
(Music)

தர்மம் அனைத்தும் உன்னில் உதிக்கும் 
தர்மம் உரைக்கும் தர்மம் அதற்கும் 
(2)
உன் பற்களுமே  கர்மம் விலக்கும் 
உன் பொற்பதமே பதமே இன்பம் அளிக்கும் 
(2)
ஒரே தேவன் என்றே அழைக்கும்
உன்னை மன்னன் என்றே உரைக்கும்
ஒரே தேவன்

முதல் பக்கம்


14. எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே(எண்ணப் பறவை சிறகடித்து)

)

 
14. (124-134)
ஸர்வக: ஸர்வவித்பாநு: விஷ்வக் ஸேநோ  ஜனார்தன: |
வேதோ  வேத விதவ் யங்கோ   வேதாங்கோ  வேதவித்  கவி :  ||

அனைத்தையும் கடந்தவன் அனைத்திலும் நிறைந்தவன்
எதிர்த்தவனை வெல்லுமோர் படையிலாத் திருமகன்
துதித்திருக்கும் நல்லநெஞ்சில்  மகிழ்ச்சிகொண்டு சேர்ப்பவன்  
வேதமாயி ருப்பவன் வேதறிந்த சிறப்பவன்
வேதமுற்ற   அங்கமாகி வேதவித்து மானவன்
கோதுமற்ற குறைகளற்ற தீர்க்கதரிசி தானிவன் 

____________________

எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே எண்ணம் கடந்தவனே 
நீ அ..னைத்தும் கடந்து அ..னைத்திலும் நின்று  பரமனுமானவனே
(SM)
எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே எண்ணம் கடந்தவனே 
நீ அ..னைத்தும் கடந்து அ..னைத்திலும் நின்று  பரமனுமானவனே
(MUSIC)

நல்லோர் துன்பம் சென்றே இன்பம் வந்தே நிலைக்கின்றதாய் (2)
உன்னைத் துதிப்பவர் வாழ்வில் மகிழ்ச்சி ஒன்றாலே கொண்டே நிரப்புகின்றாய் (2)
(SM)
எதிர்த்திட உன்னை வென்றிடச் சேனை ஒன்றும் இங்குளதா
என்று நினைக்கப்பகை வென்று முடிக்க என்றே இருக்கின்றவா 
எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே எண்ணம் கடந்தவனே 
நீ அ..னைத்தும் கடந்து அ..னைத்திலும் நின்று  பரமனுமானவனே
(MUSIC)

வேதமுமாகி வேதங்கள் நான்கின்உயிராய் இருக்கின்றவா (2) 
உன்னை வேதங்கள் நான்கும் துதித்திடுமாறே உயர்வாய் இருக்கின்றவா 
(2)
(SM)
கோது இல்லாமல் குறைகள் இல்லாமல் முழுதாய் ஜொலிக்கின்றவா நீ 
அனைத்தினையும் அறியும்-தீர்க்க தரிசியும் தானல்லவா 
எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே எண்ணம் கடந்தவனே 
நீ அ..னைத்தும் கடந்து அ..னைத்திலும் நின்று  பரமனுமானவனே

முதல் பக்கம்



16. வாருங்களேன் வாருங்களேன்(கோபியரே கோபியரே)

 16. (143-152)
ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸவயோநி:புநர்வஸு: ||

சுயம்ப்ரகாச ஒளியுடன் உணர்வின்சோதி யானவன்
புலன்வயம் படும்பொருள் தனில்படா திருப்பவன்
அதில்படும் உயிர்களின் குறைதனைப்  பொறுப்பவன்
உதிக்குமண்ட மானவன் அதற்குமுன்  னிருப்பவன்
 தொற்றும் பாவமற்றவன்  என்றும்எதிலும் வெற்றியைப்
பெற்றிருக்கும் கொற்றவன் தோல்விஎன்றும் அற்றவன்
சுற்றுருண்ட  அண்டம்தன்னை தோன்றச்செய்த காரணன்
மற்றிருக்கும்  யாவினுள்ளும் உள்ளுமான ஆண்டவன்
--------------------------


வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c
(SM)
வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c

யோகத்துயில் கிடக்கிறவன் பொன் மயமாய் மின்னுபவன் 
தான் கொண்ட தன்னுணர்வில் ஒளிமயமாய் ஜொலிக்கிறவன் 
தான் கொள்ளும் யோகத்துயில் தன்னுணர்வாய் ஜொலிக்கிறவன்-c
யோகத்துயில் கிடக்கிறவன் பொன் மயமாய் மின்னுபவன் 
தான் கொண்ட தன்னுணர்வில் ஒளிமயமாய் ஜொலிக்கிறவன்
வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c
 (MUSIC)

கண்டிடுவோர் புலன்களையே கவர்ந்திழுக்கும் பொருள்களைத்தான் 
படைத்திருந்தும் தனித்திருக்கும் பேரழகைப் பாருங்களேன்
படைத்திருந்தும் தனித்திருக்கும் பேரழகைப் பாருங்களேன்-c
கண்டிடுவோர் புலன்களையே கவர்ந்திழுக்கும் பொருள்களைத்தான் 
படைத்திருந்தும் தனித்திருக்கும் பேரழகைப் பாருங்களேன்
குந்துமணி அளவுமவன் புலன்வயத்தில் இல்லாமல் 
அதில் உழன்றே இரும் உயிரை பொறுப்பதையும் பாருங்களேன் 
அதில் உழன்றே இரும் உயிரை பொறுப்பதையும் பாருங்களேன்-c
குந்துமணி அளவுமவன் புலன்வயத்தில் இல்லாமல் 
அதில் உழன்றே இரும் உயிரை பொறுப்பதையும் பாருங்களேன்
வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c
 (MUSIC)

ஆதியினில் அண்டம்தனை படைத்து-அதை ஆளுபவன்
அதில் உதிக்கும் எவற்றினுள்ளும் பொருளும் உயிரும் ஆகிறவன்
அதில் உதிக்கும் எவற்றினுள்ளும் பொருளும் உயிரும் ஆகிறவன்-c
ஆதியினில் அண்டம்தனை படைத்து-அதை ஆளுபவன்
அதில் உதிக்கும் எவற்றினுள்ளும் பொருளும் உயிரும் ஆகிறவன்
தேடிவரும் பாவங்களும் ஓடிவிடச் செய்கிறவன் 
எங்கும் எதையும்  என்றும் எதிலும் வெற்றிதனைப் பெறுகிறவன்
எங்கும் எதையும்  என்றும் எதிலும் வெற்றிதனைப் பெறுகிறவன்-c
தேடிவரும் பாவங்களும் ஓடிவிடச் செய்கிறவன் 
எங்கும் எதையும்  என்றும் எதிலும் வெற்றிதனைப் பெறுகிறவன்
வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c


முதல் பக்கம்


Wednesday, December 8, 2021

8.லோகத்தைப் படைப்பவனே(கேட்டதும் கொடுப்பவனே)

 8. (65-74)

ஈஸான: பராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி:|
ஹிரண்ய கர்
ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதன: ||

ஞாலத்துயிர் படைத்து-காத்து உயிருமா யிருப்பவன்
காலத்துக்கே காலம்சொல்லி காலம்கடந்து நிற்பவன்
சீலம்கண்டு போற்றலாகக் கோலம்கொண்ட கோமகன்
புலத்திருந்து உயிர்களுள்ளே உய்யுகின்ற  உயிரிவன்
தங்கவண்ணம் எங்கும்மின்னும் அங்கம்கொண்ட தூயவன்
எங்கும்உயிர்கள் தங்கும்புவியை காவல்கொண்ட தாயவன்
கோதில்லாத சாதுக்களின் செயலும்பலனும் ஏற்பவன் 
மாதவத்தில் மகரிஷிகள் மனதைவைக்கும் மாதவன்

***********************************************************************************************


லோகத்தைப் படைப்பவனே கண்ணா கண்ணா 
அதில் உயிர் ஆனவனே கண்ணா கண்ணா
(2)
காலத்தைச் செய்தவனே கண்ணா கண்ணா
(SM)
காலத்தைச் செய்தவனே கண்ணா கண்ணா
நீயதைக் கடந்தவனே  கண்ணா கண்ணா
மாதவ ஞானியர்கள் கண்ணா கண்ணா 
உன் பதம் தேடி நிற்பார் கண்ணா கண்ணா
லோகத்தைப் படைப்பவனே கண்ணா கண்ணா 
அதில் உயிர் ஆனவனே 
(MUSIC)
தூய-நல் சாதுக்களின் கண்ணா கண்ணா 
செயல் பலன் ஏற்பவனே கண்ணா கண்ணா 
தூய-நல் சாதுக்களின் கண்ணா கண்ணா 
செயல் பலன் ஏற்பவனே 

சேரிடம் ஓரிடம் தான் கண்ணா கண்ணா 
சேரிடம் உன்னிடம் தான் கண்ணா உயிர் 
உலகத்தைக் காப்பவனே கண்ணா கண்ணா பொன்மயம் ஆனவனே 
(VSM)
லோகத்தைப் படைப்பவனே கண்ணா கண்ணா 
அதில் உயிர் ஆனவனே கண்ணா கண்ணா !
(MUSIC)
நீ கொண்ட சீலத்தையே  கண்ணா கண்ணா 
கண்டு நான் போற்றிடவே கண்ணா கண்ணா
உன்னடி பணிந்து நின்றேன் கண்ணா கண்ணா 
எனை உனையாக்கிடுவாய்  கண்ணா கண்ணா
உன்மடி பார்த்து நின்றேன் கண்ணா கண்ணா 
அமர்ந்திட  இடம் தருவாய்   கண்ணா கண்ணா 
(MUSIC)
 கண்ணா 
கண்ணா 
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா 
(SM)
உன்னையல்லால்-ஒரு தெய்வமெனக்கெது கண்ணா கண்ணா 
உன்னை-நினைத்ததும் கண்பெருக்கோடுது கண்ணா கண்ணா 
உன் நினைவானது என்னை யக்குது கண்ணா கண்ணா 
உந்தன் திருவடி நெஞ்சை-நிறைக்குது கண்ணா கண்ணா 
கண்ணா 
கண்ணா 
லோகத்தைப் படைப்பவனே கண்ணா கண்ணா 
அதில் உயிர் ஆனவனே கண்ணா கண்ணா




முதல் பக்கம்


13. அவனுக்கு இல்லை ஒரு பிறப்பு(மலர்களிலே பல நிறம் கண்டேன்)

13. (115-123)
ருத்ரோ  பஹுசிரா  பப்ருர்   விச்வயோநிஸ் ஸுசிஸ்ரவா  |
அம்ருதஸ் சாஸ்வத  ஸ்தாணுர்   வராரோஹோ  மஹாதப :   ||

நெகிழ்ந்தகண் சுரப்பவன்  எழுந்தபல் சிரத்தவன்
ஏழுலகின்  அரசனாம்  அவைபிறந்த கர்ப்பமாம்
எழிலுமான புனிதமான பெயர்கள்கொண்ட சிறப்பவன்
 பிறந்திடாநல்  பிறப்பவன் இறந்திடாமல் இருப்பவன்
நிலைத்துநிற் பதாயிருந் தசைவுறா  நிரந்தரன்
முயன்றுசென் றடைவதாய் சிறந்திருக்கு மோரிடம் 
பயின்றநல் தவத்திலே உறைவதான  ஞானமாம்

************************* 

அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு
அவன் பெயர் ஆஹா தனிவனப்பு தவம் புனிதமும் ஞானமும் அவன் இருப்பு  
அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு
(MUSIC)
அவன் கருவறையில் உருவாகும் ஏழுலகும் அவன் ராஜாங்கம் (2)
அசைவு இல்லை எனும் படியாகும் நிலை கொண்ட நிரந்தர நிஜமாகும்
அவன் அசைவு இல்லை எனும் படியாகும் நிலை கொண்ட நிரந்தர நிஜமாகும் 
அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு
 (MUSIC)

எழுந்திடும் பற்பல சிரத்தாலே நெகிழ்ந்திரும் அவன் கண் சுரப்பாலே (2)
முயன்றிடும் பக்தர்கள் முனைப்பாலே புகல் அடைந்திட அவன் ஓர் இடமாமே (2)
அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு
அவன் பெயர் ஆஹா தனிவனப்பு தவம் புனிதமும் ஞானமும் அவன் இருப்பு  
அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு

முதல் பக்கம்


Tuesday, December 7, 2021

0.அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம்(அழகன் முருகனிடம் ஆசை கொண்டேன்)

 

நித்தியம் மனம் எண்ணியே  ..ஆ..ஆ..ஆ..

ஆயிரம் மாலனின் நாமமும்  

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம்   ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

(MUSIC)

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்

(Short Music)

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்

(Short Music)

உள்ளம் தனில் பெயரைப் பதித்திடுவோம் 

அதன் பொருளை அறிந்தவனைத் துதித்திடுவோம்  

உள்ளம் தனில் பெயரைப் பதித்திடுவோம் 

அதன் பொருளை அறிந்தவனைத் துதித்திடுவோம்  ஆ..ஆ..ஆ..

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்

(MUSIC)

தனியொரு ஆளெனவே உலகினைப் படைத்தவனை ..ஆ ..ஆ 

தனியொரு ஆளெனவே உலகினைப் படைத்தவனை

ஒன்றி தினம் ஓதிடுவோம்  என்று மனம் எண்ணியதால்

ஒன்றி தினம் ஓதிடுவோம் என்றென் மனம் எண்ணியதால்

எண்ணிறந்த பேரழகாய் காட்டுமவன் பெயரழகை

எண்ணிறந்த பெயரழகாய்  காட்டுமவன் பேரழகை

உள்ளத்தால் பாடவும்தான் உண்மையைத் தேடவும் தான்  

நன்மையை நாடவும் தான்  ஆ..ஆ..ஆ..

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்

(MUSIC)

மலையை எடுத்தவனை அலைமேல் படுத்தவனை (2)

மெய்யுருகப் பாடிப் பண்ணால் மெய்யை நாம் நாடிடவே

மெய்யுருகப் பாடிப் பின்னால் மெய்யை நாம் நாடிடவே

பெயரும் பொருளாலே பொருளும் பெயராலே

பெயர் மெய்ப்பொருளாமே பொருள் மெய்ப் பெயராமே 

என்று-நான் கண்ட நிஜம் உலகுக்குத் தரலானேன் 

உலகுக்குத் தரலானேன் ஆ...ஆ... 

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்


முதல் பக்கம்


Monday, December 6, 2021

12. காலைத் தாமரை விழியில்(காதல் ராஜ்ஜியம் எனது)

 12. (105-114)


12. (105-114)
வஸுர்வஸுமநாஸ்  ஸத்யஸ்  ஸமாத்மா  ஸம்மிதஸ்ஸம : |
அமோகப்  புண்டரிகாக்ஷோ  வ்ருஷகர்மா  வ்ருஷாக்ருதி   ||

வசுக்களில் சிறந்தவன் வசிப்பதை உகந்தவன்
அசைந்திடாத உண்மையில் இசைவுறும் மனத்தவன்
பிழைபடாத் தராசென அசைவுறா மனத்தினன்
மறைதனில் ஒளிர்பவன் விரைமுனி உணர்பவன்
குறைபடா நிறைஅவன் குறைந்திடா *விரைஅவன்
நடு நிலை வகிப்பவன் தொழுதிடக் கொடுப்பவன்
தாமரை விழியினன் நேர்மையின்  வழியினன்
அறத்திலே உறைபவன் அறமுமா யிருப்பவன் 
வசிப்பதை  உகந்தவன் = பக்தர் மனதினில் வசிப்பதை விரும்புபவன்
விரைமுனி = சிறந்த முனிவர்களால் உணரப் படுபவன்
விரைசிறப்புசிறந்த செல்வம்
அசைந்திடா நிரையவன் = நீதி பிழறாத தராசு ( பக்தர்களை சமமாக பாவிப்பவன்)


காலைத் தாமரை விழியில் ஸ்வரமான  நான்-மறை மொழியில் 
சரியான அறம் அவன் வழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
(2)
(VSM)

நல்லோர்கள்  மனம்-அவன் இருப்பு  மெய்ஞான  முனிவரின் உணர்வு 
ஈடில்லாத-நேர் வழியாலே பக்தி செய்வோரின் வாழ்வவன் பொறுப்பு 
நல்லோர்கள்  மனம்-அவன் இருப்பு  மெய்ஞான  முனிவரின் உணர்வு 
ஈடில்லாத-நேர் வழியாலே பக்தி செய்வோரின் வாழ்வவன் பொறுப்பு..
காலைத் தாமரை விழியில் சுகமா...ன  நான் மறை மொழியில் 
சரியான அறம் அவன் வழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
(MUSIC)

என்றும் அசையாமே மறம்-தன்னில் இசையாமே நேரான-திடமே அவன்
அங்கிங்..கென்..னாமே நடு நிற்கும்  தராசே எனலாகும் சிறப்பே அவன் 
ஆ..என்றும் அசையாமே மறம்-தன்னில் இசையாமே நேரான-திடமே அவன்
அங்கிங்..கெ.. னாமே நடு நிற்கும்  தராசே எனலாகும் சிறப்பே அவன் 
எந்நாளும் நேர்மையில் பிடிப்பு கொண்டாடும் அவன் திருப் பிறப்பு 
ராமன் போலவே பலதாமே அதைச் சொல்லாலே சொல்வது அரிது 
காலைத் தாமரை விழியில் ஸ்வரமான  நான் மறை மொழியில் 
சரியான அறம் அவன் வழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
 (MUSIC)

பச்சைக் கிளி-தோற்கும் விதம்-இச்சை மொழி-பேசும் மாலந்த ஆராமுதம்
பற்றி அவன் பாதங்களை சென்றாங்கிருப்போர்க்கு சென்றோடும் சாவின் பயம் 
அம்மாலன்  தனித் திரு நாமம் சொல்வோர்க்கு ஏதினி பிறப்பு
ஏது-வேறினி பணி-ஏது எனச் சொல்வோரின் மாயையும் விலகும் 
காலைத் தாமரை விழியில் ஸ்வரமான  நான் மறை மொழியில் 
சரியான அறம் அவன் வழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்


முதல் பக்கம்



Sunday, December 5, 2021

11.தொன்று தொட்டு அகலாத ஒன்று(எண்ணிரண்டு பதினாறு வயது)

 1. (96-10


11. (96-104)
அஜஸ் சர்வேஸ்வரஸ்  சித்த  சித்திஸ்  சர்வாதிர ச்யுத: வ்ருஷாகபி  ரமேயாத்மா  சர்வயோக  விநிச்ஸ்ருத: ||

பிறந்திடாத ஒன்றும்நீ இருந்திருக்கு மொன்றும்நீ
கரைந்தழைக்கும் நெஞ்சிலே விரைந்துசெல்லு மெண்ணம்நீ
குறைபடா திரும்நிறை உரைபடா துறும்மறை
விரைபடு மிலக்குநீ துலங்குகின்ற சோதிநீ

யாது மானவாதிநீ ஒதும்நல்ல வேதம்நீ
எழும்மறத்தி னூழிலே விழும்விதத்தி லாகவே 
ஆழ்ந்தமிழ்ந்த புவிதனை காத்தநல்வ ராஹம்நீ
 கற்றுறாச் சிறப்புநீ பற்றுராப் பிறப்புநீ




தொன்று-தொட்டு அகலாத-ஒன்று
(SM)
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
(MUSIC)
நெஞ்சுருகி  நீ அழைத்தால் உன்னிடத்தில்  விரைவாய் 
சங்கினொடு சக்கரமும் தானெடுத்து வருவான்
நெஞ்சுருகி  நீ அழைத்தால் உன்னிடத்தில்  விரைவாய் 
சங்கினொடு சக்கரமும் தானெடுத்து வருவான்
 சங்கினொடு சக்கரமும் ... தானெடுத்து .. வருவான்
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
(MUSIC)
ஆ .. (in  karaoke)
ஆழ்ந்தமிழ்ந்த புவிதனையே காத்த அந்த பெருமான் கற்றதிலும் பெற்றதிலும் பற்றுதனைத் துறந்தான்
ஆழ்ந்தமிழ்ந்த புவிதனையே காத்த அந்த பெருமான் கற்றதிலும் பெற்றதிலும் பற்றுதனைத் துறந்தான்

கற்றதிலும் பெற்றதிலும் பற்றுதனைத் துறந்தான்
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
(MUSIC)
குறைபடாத நிறையவன் தாள் போற்றிப் பாடிப் பணிவோம் (2)
அவன் உரைநடைக்ககப்படாத  வேத ஜோதிப் பெருமான் 
உரைப்பதற்குத் தோன்றிடாத மறையின் ஞானப் பெருமான்
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று