Thursday, December 9, 2021

17. அருள் தரும் அய்யனை(சரவணப் பொய்கையில்)

 


17. (153-164)
உபேந்த்ரோ வாமந:பராம்ஸுரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்கரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||


இந்திரனுக் கிளையவன் அவனுக்கும்-மே..லானவன்
சிறுவனான வாமனன் பரமபுருஷ னானவன்
சிறந்தநோக்கம் கொண்டவன் நோக்கிடவே தூயவன்
விரிந்ததொரு வீரியத்தில் முடிவில்லாத மாயவன்
தானேதன்னில்  தோன்றுவான் தன்னில்யாவும் கொள்ளுவான்
தானுமான தம்பிரான்  நியமம்செய்தி டாதிரான்
தன்னிகரும் ஒன்றிலாத நிருவகிக்கும் ஓர்பிரான்


அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(SM)
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ

அவனுக்கு ஈடாய் வேறேதோ (2)
 அந்தக் கோமகன் மேலுமோர் கோனேதோ
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

அவனுக்கு மூத்தவன்தான் இந்திரனே ஆனால் 
அவனுக்கும் மாதவன் தான் கோமகனே
நோக்கினில் நல்ல அண்ணல் வாமனனே 
எந்த நாளிலும் அவன் தனி  ஆண்மகனே 
ஓ...ஓஓஓ.. (2)
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

நியமங்கள் செய்யும் நல்ல தூயவனே அவன் அந்தமில்லாத ஒரு மாயவனே (2)
தன்மய..மாய்த் தானே  தோன்றிப்-பின்னே
தன்மய..மாய்த் தானே  தோன்றிப்-பின்னே-அந்த வீரியன் தன்னிடம் யாவும்-கொள்வான்  
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
அவனுக்கு ஈடாய் வேறேதோ (2)
 அந்தக் கோமகன் மேலுமோர் கோனேதோ
அருள் தரும் அய்யனைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ


முதல் பக்கம்


No comments:

Post a Comment