Thursday, December 9, 2021

18. மலர்ந்த முகம்(ஆயர்பாடி மாளிகையில்)


18. (165-174)
வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோ த்ஸாஹோ மஹாபல: ||

அறியஉரிய  கருத்தவன்   நோய்கள்முறிய  மருத்துவன்
என்றும்யோகம் கொள்பவன் சமரில்வெற்றி கொள்பவன்
நின்றஞானக் குன்றவன் தின்றபொருளில் இனிப்பவன்
புலன்கள்ஓயக் கடப்பவன் உலகமாயை துடைப்பவன்
மலர்ந்தமுகத்தின் ஆர்வலன் மிகுந்தான ஓர்பலன்*



மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன் பேரெழிலைக் காணீரோ
(sm)
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன் பேரெழிலைக் காணீரோ 
அவன் ஆழ்ந்தறிய கருத்தினனே நோய் முறிய மருத்துவனே 
ஓடிவந்து இங்கிவனைக் காணீரோ தேடிவந்து பேரிதத்தைக் காணீரோ
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன் பேரெழிலைக் காணீரோ
(MUSIC)

தின்னத் தின்ன இனிப்பதுவாய் புலனின்-வலி  முறிப்பதுவாய்
உலகமாயைக் கடக்கச் செய்வான் காணீரோ
(2)
என்ன மந்திரமோ தெரியவில்லை மாயங்களும் புரியவில்லை
நம் பவமே போகுதம்மா காணீரோ பவ பயமே ஓடுதம்மா வாரீரோ    
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன்... பேரெழிலைக் காணீரோ
(music)

யோகமதைக் கொண்ட அவன்  யோகமதில் தெரிந்திடுவான் 
வேகமென யோகமதைப் பூணீரோ
யோகமதைக் கொண்ட அவன்  யோகமதில் தெரிந்திடுவான் 
தாமதமேன் யோகமதைப் பூணீரோ
அவன் ஆயிரத்தின் நாமம் அதில் ஒன்றிரண்டே போதுமதன் 
பொருளறிந்தே உரைத்திடவே வாரீரோ 
பொருளறிந்தே பொருளுணர வாரீரோ 
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன்... பேரெழிலைக் காணீரோ
(music)

வாழ்க்கையொரு போர்க்களமே அனுதினமும் அமர்க்களமே
அண்ணலிடம் பலம் பெறவே வாரீரோ
(2)
அவன் வெஞ்சமரை வெல்லுபவன் மிகுந்ததான வலிவுள்ளவன்
யானை பலம் அவன் பலமே காணீரோ ஞானமலை அவன் எனவே காணீரோ 
மலர்ந்த முகம் தாமரையோ அவனிதயம் ஓர் மலையோ
மாலனவன் பேரெழிலைக் காணீரோ
மாலனவன் பேரெழிலை...க் காணீரோ 

முதல் பக்கம்


No comments:

Post a Comment