Friday, December 10, 2021

19. எத்தனையோ இன்பம்(முத்துக்களோ கண்கள்)

 19. (175-182)

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹா ஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸயவபுஸ் ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத்: ||

தலைசிறந்த அறிவுநீ  அனைதினுள்ளும்  சாரம்நீ
குலைந்திடாத சக்திநீ அணைந்திடாநல்  சோதிநீ
விளக்கவொண்ணா   தோற்றம்நீ  குறைந்திடாத திருவும்நீ
அளக்கவொண்ணா   சாரம்நீ நிலைத்திருக்கும் மலையும் நீ

எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே
எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே
விளக்கவொண்ணா உரு என்றென்றும் மறுக்கலாகா ருசு 
அளக்க எண்ணிக்கை ஏதுமில்லா விளங்கும் சார மது 
எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே
(MUSIC)

சிறந்த ஞானம் அனைத்தின் சாரம் நிலைத்த மாலவன் நீ 
சிறந்த ஞானம் அறிவின் சாரம் நிலைத்த மாலவன் நீ 
நிறைந்த உரமும்  வளரும் திருவும் உடைத்த கோமகன் நீ  
மலையின் மாண்பினனே எந்நாளும் எரியும் ஆதவனே 
எனினும் விழிநீரே போதும் உன்னை அடைவதற்கே
எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே
(MUSIC)

நூறின் நூறு பெயரின் சீரு நீயும் கொண்டதென்ன (2)
அவைகள் கூறும் மனதில் ஆறு பக்தி ஆனதென்ன 
அவற்றில் ஒன்றே ஒன்று எப்போதும் போதும் என்பதனை 
ஈசன் பார்வதி கூறக் கேட்டோம் அதற்கு மேலும் என்ன 
எத்தனையோ இன்பம்  எத்தனையோ துன்பம்
கொண்டது வாழ்க்கையாய் 
மக்களின் யாக்கையாய் வைத்தனையே ஐயே

முதல் பக்கம்


No comments:

Post a Comment