Thursday, December 9, 2021

14. எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே(எண்ணப் பறவை சிறகடித்து)

)

14. (124-134)
ஸர்வக: ஸர்வவித்பாநு: விஷ்வக் ஸேநோ  ஜனார்தன: |
வேதோ  வேத விதவ் யங்கோ   வேதாங்கோ  வேதவித்  கவி :  ||

அனைத்தையும் கடந்தவன் அனைத்திலும் நிறைந்தவன்
எதிர்த்தவனை வெல்லுமோர் படையிலாத் திருமகன்
துதித்திருக்கும் நல்லநெஞ்சில்  மகிழ்ச்சிகொண்டு சேர்ப்பவன்  
வேதமாயி ருப்பவன் வேதறிந்த சிறப்பவன்
வேதமுற்ற   அங்கமாகி வேதவித்து மானவன்
கோதுமற்ற குறைகளற்ற தீர்க்கதரிசி தானிவன் 

____________________

எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே எண்ணம் கடந்தவனே 
நீ அ..னைத்தும் கடந்து அ..னைத்திலும் நின்று  பரமனுமானவனே
(SM)
எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே எண்ணம் கடந்தவனே 
நீ அ..னைத்தும் கடந்து அ..னைத்திலும் நின்று  பரமனுமானவனே
(MUSIC)

நல்லோர் துன்பம் சென்றே இன்பம் வந்தே நிலைக்கின்றதாய் (2)
உன்னைத் துதிப்பவர் வாழ்வில் மகிழ்ச்சி ஒன்றாலே கொண்டே நிரப்புகின்றாய் (2)
(SM)
எதிர்த்திட உன்னை வென்றிடச் சேனை ஒன்றும் இங்குளதா
என்று நினைக்கப்பகை வென்று முடிக்க என்றே இருக்கின்றவா 
எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே எண்ணம் கடந்தவனே 
நீ அ..னைத்தும் கடந்து அ..னைத்திலும் நின்று  பரமனுமானவனே
(MUSIC)

வேதமுமாகி வேதங்கள் நான்கின்உயிராய் இருக்கின்றவா (2) 
உன்னை வேதங்கள் நான்கும் துதித்திடுமாறே உயர்வாய் இருக்கின்றவா 
(2)
(SM)
கோது இல்லாமல் குறைகள் இல்லாமல் முழுதாய் ஜொலிக்கின்றவா நீ 
அனைத்தினையும் அறியும்-தீர்க்க தரிசியும் தானல்லவா 
எண்ணும் நினைப்பில் நிறைந்தவனே எண்ணம் கடந்தவனே 
நீ அ..னைத்தும் கடந்து அ..னைத்திலும் நின்று  பரமனுமானவனே

முதல் பக்கம்

No comments:

Post a Comment