Wednesday, December 8, 2021

8.லோகத்தைப் படைப்பவனே(கேட்டதும் கொடுப்பவனே)

 8. (65-74)

ஈஸான: பராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி:|
ஹிரண்ய கர்
ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதன: ||

ஞாலத்துயிர் படைத்து-காத்து உயிருமா யிருப்பவன்
காலத்துக்கே காலம்சொல்லி காலம்கடந்து நிற்பவன்
சீலம்கண்டு போற்றலாகக் கோலம்கொண்ட கோமகன்
புலத்திருந்து உயிர்களுள்ளே உய்யுகின்ற  உயிரிவன்
தங்கவண்ணம் எங்கும்மின்னும் அங்கம்கொண்ட தூயவன்
எங்கும்உயிர்கள் தங்கும்புவியை காவல்கொண்ட தாயவன்
கோதில்லாத சாதுக்களின் செயலும்பலனும் ஏற்பவன் 
மாதவத்தில் மகரிஷிகள் மனதைவைக்கும் மாதவன்

***********************************************************************************************


லோகத்தைப் படைப்பவனே கண்ணா கண்ணா 
அதில் உயிர் ஆனவனே கண்ணா கண்ணா
(2)
காலத்தைச் செய்தவனே கண்ணா கண்ணா
(SM)
காலத்தைச் செய்தவனே கண்ணா கண்ணா
நீயதைக் கடந்தவனே  கண்ணா கண்ணா
மாதவ ஞானியர்கள் கண்ணா கண்ணா 
உன் பதம் தேடி நிற்பார் கண்ணா கண்ணா
லோகத்தைப் படைப்பவனே கண்ணா கண்ணா 
அதில் உயிர் ஆனவனே 
(MUSIC)
தூய-நல் சாதுக்களின் கண்ணா கண்ணா 
செயல் பலன் ஏற்பவனே கண்ணா கண்ணா 
தூய-நல் சாதுக்களின் கண்ணா கண்ணா 
செயல் பலன் ஏற்பவனே 

சேரிடம் ஓரிடம் தான் கண்ணா கண்ணா 
சேரிடம் உன்னிடம் தான் கண்ணா உயிர் 
உலகத்தைக் காப்பவனே கண்ணா கண்ணா பொன்மயம் ஆனவனே 
(VSM)
லோகத்தைப் படைப்பவனே கண்ணா கண்ணா 
அதில் உயிர் ஆனவனே கண்ணா கண்ணா !
(MUSIC)
நீ கொண்ட சீலத்தையே  கண்ணா கண்ணா 
கண்டு நான் போற்றிடவே கண்ணா கண்ணா
உன்னடி பணிந்து நின்றேன் கண்ணா கண்ணா 
எனை உனையாக்கிடுவாய்  கண்ணா கண்ணா
உன்மடி பார்த்து நின்றேன் கண்ணா கண்ணா 
அமர்ந்திட  இடம் தருவாய்   கண்ணா கண்ணா 
(MUSIC)
 கண்ணா 
கண்ணா 
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா 
(SM)
உன்னையல்லால்-ஒரு தெய்வமெனக்கெது கண்ணா கண்ணா 
உன்னை-நினைத்ததும் கண்பெருக்கோடுது கண்ணா கண்ணா 
உன் நினைவானது என்னை யக்குது கண்ணா கண்ணா 
உந்தன் திருவடி நெஞ்சை-நிறைக்குது கண்ணா கண்ணா 
கண்ணா 
கண்ணா 
லோகத்தைப் படைப்பவனே கண்ணா கண்ணா 
அதில் உயிர் ஆனவனே கண்ணா கண்ணா




முதல் பக்கம்


No comments:

Post a Comment