Monday, December 6, 2021

12. காலைத் தாமரை விழியில்(காதல் ராஜ்ஜியம் எனது)

 12. (105-114)


12. (105-114)
வஸுர்வஸுமநாஸ்  ஸத்யஸ்  ஸமாத்மா  ஸம்மிதஸ்ஸம : |
அமோகப்  புண்டரிகாக்ஷோ  வ்ருஷகர்மா  வ்ருஷாக்ருதி   ||

வசுக்களில் சிறந்தவன் வசிப்பதை உகந்தவன்
அசைந்திடாத உண்மையில் இசைவுறும் மனத்தவன்
பிழைபடாத் தராசென அசைவுறா மனத்தினன்
மறைதனில் ஒளிர்பவன் விரைமுனி உணர்பவன்
குறைபடா நிறைஅவன் குறைந்திடா *விரைஅவன்
நடு நிலை வகிப்பவன் தொழுதிடக் கொடுப்பவன்
தாமரை விழியினன் நேர்மையின்  வழியினன்
அறத்திலே உறைபவன் அறமுமா யிருப்பவன் 
வசிப்பதை  உகந்தவன் = பக்தர் மனதினில் வசிப்பதை விரும்புபவன்
விரைமுனி = சிறந்த முனிவர்களால் உணரப் படுபவன்
விரைசிறப்புசிறந்த செல்வம்
அசைந்திடா நிரையவன் = நீதி பிழறாத தராசு ( பக்தர்களை சமமாக பாவிப்பவன்)


காலைத் தாமரை விழியில் ஸ்வரமான  நான்-மறை மொழியில் 
சரியான அறம் அவன் வழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
(2)
(VSM)

நல்லோர்கள்  மனம்-அவன் இருப்பு  மெய்ஞான  முனிவரின் உணர்வு 
ஈடில்லாத-நேர் வழியாலே பக்தி செய்வோரின் வாழ்வவன் பொறுப்பு 
நல்லோர்கள்  மனம்-அவன் இருப்பு  மெய்ஞான  முனிவரின் உணர்வு 
ஈடில்லாத-நேர் வழியாலே பக்தி செய்வோரின் வாழ்வவன் பொறுப்பு..
காலைத் தாமரை விழியில் சுகமா...ன  நான் மறை மொழியில் 
சரியான அறம் அவன் வழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
(MUSIC)

என்றும் அசையாமே மறம்-தன்னில் இசையாமே நேரான-திடமே அவன்
அங்கிங்..கென்..னாமே நடு நிற்கும்  தராசே எனலாகும் சிறப்பே அவன் 
ஆ..என்றும் அசையாமே மறம்-தன்னில் இசையாமே நேரான-திடமே அவன்
அங்கிங்..கெ.. னாமே நடு நிற்கும்  தராசே எனலாகும் சிறப்பே அவன் 
எந்நாளும் நேர்மையில் பிடிப்பு கொண்டாடும் அவன் திருப் பிறப்பு 
ராமன் போலவே பலதாமே அதைச் சொல்லாலே சொல்வது அரிது 
காலைத் தாமரை விழியில் ஸ்வரமான  நான் மறை மொழியில் 
சரியான அறம் அவன் வழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
 (MUSIC)

பச்சைக் கிளி-தோற்கும் விதம்-இச்சை மொழி-பேசும் மாலந்த ஆராமுதம்
பற்றி அவன் பாதங்களை சென்றாங்கிருப்போர்க்கு சென்றோடும் சாவின் பயம் 
அம்மாலன்  தனித் திரு நாமம் சொல்வோர்க்கு ஏதினி பிறப்பு
ஏது-வேறினி பணி-ஏது எனச் சொல்வோரின் மாயையும் விலகும் 
காலைத் தாமரை விழியில் ஸ்வரமான  நான் மறை மொழியில் 
சரியான அறம் அவன் வழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்


முதல் பக்கம்



No comments:

Post a Comment