Thursday, December 9, 2021

7. நாரணன் போல் தெய்வம்(திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)

7. (56-64)
அக்ராஹ்ய: சாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: பிரதர்த்தந:
ப்ரபூத ஸ்த்ரிககுத்தாம பவித்ரம் மங்களம் பரம் ||
 புரிபடாத பொருளும்நீ முடிவிலாத ஏற்றம் நீ
கறைபடாத கொற்றம்நீ கருமை கொண்ட தோற்றம் நீ
சிவந்திருக்கும் தாமரை பழித்திருக்கு முன்விழி
அழித்துமூழில் நிற்பவன் அறிவில்சிறந்த விற்பனன்
*
உலகம்மூன்றின் காரணன் உணர்வுமூன்றின் பூரணன்
விளங்குதூய்மை கொண்டுமே தோன்றிநிற்கும் மங்கலன்
 *உலகம் மூன்றுபூவிண்பாதாளம். உணர்வு மூன்று : ஜாக்ரத் (விழிப்பு)ஸ்வப்ன (கனவு)சுஷுப்தி (ஆழ் உறக்கம்)
________

நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு
(2)
(MUSIC)
அவனின் நிஜம் என்றும் புரியாது அவன் மேன்மைக்கு ஒரு போதும் முடிவேது (2)
நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு
(MUSIC)
கறைகள் படாதிருக்கும் அவன் கொற்றம்-ஆழ்
கருமை நிறம் அன்றோ அவன் தோற்றம் 
(2)
சிவந்திருக்கும் கமலம் அவனின் விழி (2)
தூய்மை விளையாடும் நன் மங்கலம் அவனின் வழி (2)
நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு
(MUSIC)
பிறப்பிறப்பே இன்றி வாழ்கிறவன் அவன் ஊழியில் உலகழிந்தும் நிலைக்கிறவன் (2)
எழிலான மூவுலகின் காரணனே-அய்யன் 
எழிலான மூவுலகின் காரணனே-மூன்று 
உணர்வான அவன் என்றும் பூரணனே 
மூன்று உணர்வான அவன் என்றும் பூரணனே
நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு
அவனின் நிஜம் என்றும் புரியாது அவன் மேன்மைக்கு ஒரு போதும் முடிவேது 
நாரணன் போல் தெய்வம் வேறாரு அந்த 
மாலனின் அவதாரம் நாலாறு


 முதல் பக்கம்

No comments:

Post a Comment