Friday, December 10, 2021

20.பார் காணவே(பூமாலையில் ஓர் மல்லிகை)

ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
உன்னைப் பாடி பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
தர்மர் கேட்டு பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
(MUSIC)

உந்தனைப் போல் ஒரு ஞானியின் ஞானி.. ஆ..ஆ..ஆ..ஆ
எங்குமுண்டோ அதைச் சொல்லிடுவாய் நீ .. ஆ..ஆ..ஆ..ஆ
உந்தனைப் போல் ஒரு ஞானியின் ஞானி
எங்குமுண்டோ அதைச் சொல்லிடுவாய் நீ 
சுவை தேன் விழுதே முழுதின் முழுதே (2)
சுவைத்தால் கரும்பே அதில்-நான் எறும்பே (2)
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
உன்னைப் பாடி பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
(MUSIC)

அம்பினில் தோன்றிடும் உன்னுயர் வீரம்  ..ஆ..ஆ..ஆ..ஆ
தென்படுமோ அதில் புவிதனில் பாவம்..ஆ..ஆ..ஆ..ஆ
அம்பினில் தோன்றிடும் உன்னுயர் வீரம்  
தென்படுமோ அதில் புவிதனில் பாவம்

திருவின் தரனே அவளின் வரனே
திருவின் தரனே அருளும் வரனே 
உயர்ந்தோர் முயன்றே அடையும் சரணே (2)
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
உன்னைப் பாடி பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
உந்தன் பேர்கள் தேன் போன்றது
 (BOTH)

முதல் பக்கம்

No comments:

Post a Comment