Monday, June 29, 2015

5. தானே தன்னில் தோன்றிடுவான்(தாயில்லாமல் நானில்லை)


5. (37-45)
ஸ்வயம்பு சம்புராதித்ய புஷ்கராக்ஷோ மஹாஸ்வந :|
அநாதிநிதநோ தாதா விதாதா தாதுருத் தம: ||

தானேதன்னில் தோன்றுவான் தானுமான தம்பிரான்
காணும்கண்ணின் கண்ணிவன் அழகைமயக்கும் அழகிவன்
சூரியனின் ஒளியிவன் தாமரையின் விழியவன்
வேதம்சொன்ன நாயகன் முதலும்முடிவு மற்றவன்

படைத்திருக்கும் காரணன் படைப்பைக்காக்கும் நாரணன்
நடத்திசெயலைப் பார்ப்பவன் செயலும்பலனும் ஆனவன்
படைப்பதான பிரமனையும் படைத்திருக்கும் படியிவன்
உடைபடாத அணுவினுள்ளே அணுவதான ஆண்டவன்
(தாயில்லாமல் நானில்லை)

 
தானே-தன்னில் தோன்றிடுவான் தன்-மயமாகி நின்றிடுவான்
தனக்கு இணை இல்லாதான் என்றிட-அவனே தனித்திருப்பான்
(2)
தானே-தன்னில் தோன்றிடுவான்
(MUSIC)
காணும் கண்ணின் கண்ணாம் 
அவன் அழகை மயக்கும் அழகாம்
(2)
சூரியன் ஒளியாம் தாமரை விழியான்
வேதத்தின் வித்தகன் தலைவனுமாம்
(2)
என்றும் தானே-தன்னில் தோன்றிடுவான்
(MUSIC)
ஆதியந்தமும் இல்லான் அவன் தானாய் எதையும் படைப்பான் (2)
படைத்ததைக்-காத்து ... 
செயல்பட-வைத்து..
படைத்ததைக்-காத்து செயல்பட-வைத்து
செயலும்-பலனும் ஆகிடுவான்
தானே-தன்னில் தோன்றிடுவான்
(MUSIC)
உலகினை பிரமன் படைப்பான்
அந்த பிரம்மனையும் இவன் படைப்பான்
(2)
அண்டத்தைப் படைப்பான் அதனிலும் நிறைவான்
அணுவினுக்கணுவாய் அவன் இருப்பான்
(2)
தானே-தன்னில் தோன்றிடுவான்+ (MUSIC)
ஜோதி வடிவினன் அவன் தான்
எங்கும் நிறையும் ப்ரணவமும் அவன் தான்
(2)
அனைத்திலும் இருப்பான் ஆனந்தம் அளிப்பான்
அவன்-தாள் சேர்வது தான்-முக்தி
(2)
என்றும் தானே-தன்னில் தோன்றிடுவான் தன்-மயமாகி நின்றிடுவான்
தனக்கு-இணை இல்லாதான் என்றிட-அவனே தனித்திருப்பான்
தானே-தன்னில் தோன்றிடுவான்

No comments:

Post a Comment