Monday, June 29, 2015

6. வார்த்தையால் ஆண்டவன் (மௌனமே பார்வையால்)

  
(46-55)
 அப்ரமேயோ ஹ்ரிஷீகேஸ: பத்மநாபோ மரப்ரபு: |
விஸ்வகர்மா மனுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்ட ஸ்தவிரோ த்ருவ: ||

உரைநடைக் குரைபடா திறைவரை யறைக்குறா
பொருள்அது மருள்வது களைந்திடும் அருள்அது
பிறைதரும் இதம்அது கதிர்தனில் ஒளிர்வது
உடல்எழும் மலர்தரும் உரம்தனில் வளர்புலம்
உயர்அகம் உறைஅமர் அவர்களின்தலை அது

பெயர்ந்திடா திருந்திருக்கு மண்டம் செய்தகோமகன்
உயர்வதான சிந்தனைக்கு மோர்தலை இவன்கலை
ஓய்வதாக வந்துயிர்  அடங்குகின்ற தானவன்
பெரிதினும் பெருத்தவன் ஆதியாய் நிலைத்தவன்

உடல்எழும் மலர் = நாபித் தாமரை , உயர்அகம் = விண்ணகம் ,
உறைஅமர்அவர் = உறைகின்ற அமரர்கள்

Click here to listen to
(மௌனமே பார்வையாய்)

 
*மானிடர் வார்த்தையால் இறை பெருமை சொல்லல்-ஆமோ  
யாருமே பார்வையால் வரையறுத்துச் கூறப் போமா
(1+sm+1)
 (MUSIC)
சந்திரப்-பிறை குளிர் தந்திடும்-இதம்-அவன்
அந்த சூரியனின் ஒளிதானே ஒளி-மாலே
(Short Music)
சந்திரப்-பிறை குளிர் தந்திடும்-இதம்-அவன்
அந்த சூரியனின் ஒளிதானே
என்றும் விளங்கும் அந்த நாபிக்கமலம்
மண்ணை போற்றிக் காத்திருக்கும் உரம் தானே
மண்ணை போற்றிக் காத்திருக்கும் அறம் தானே
சொல்.. மானிடர் வார்த்தையால் இறை பெருமை சொல்லல்-ஆமோ  
யாருமே பார்வையால் வரையறுத்து கூறப் போமா
 (MUSIC)
விண்ணவர்களின் உயர் மன்னன்-அவன்தான் -
பெய..ராத-அண்டம்-செய்த ஒரு பெருமான்.. ஹரி திருமால்
(Short Music)
விண்ணவர்களின் உயர் மன்னன்-அவன்தான் -
பெயராத அண்டம் செய்த ஒரு பெருமான்
என்றுமிருக்கும் அவன் **சிந்தை உணர்வே
பல உயிர்கள் அடங்குகிற மடியேதான்
அவன் பெரிதின் பெரிது என்ற  முடிபேதான்   
சொல்.. மானிடர் வார்த்தையால் இறை பெருமை சொல்லல்-ஆமோ  
யாருமே பார்வையால் வரையறுத்து கூறப் போமா
 
 
* விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்
** பேரானந்த உணர்வலை (Supra-conciousness)
 
 


No comments:

Post a Comment