Wednesday, July 27, 2016

10. எண்ணிலா கடவுளர்க்கும் (வெண்ணிலா நேரத்திலே)



( வெண்ணிலா நேரத்திலே ) 


(86-95)
ஸுரேஸ ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: பிரஜாபவ: |
அஹஸ்ஸம்வத்சரோ வ்யாள ப்ரத்யய: ஸர்வதர்ஸந: ||

கடவுளுக்குள் கடவுள்நீ சரணம்கொள்ளும் பொருளும்நீ
அடையும்-துரிய நிலையும்நீ  விரியும்-வெளியின் விதையும்நீ
பிறக்கும்-யாவும் உன்திறம் அடைக்கலமும் உன்னிடம்
சிறக்கச்-செய்வாய் பக்தரை மறுத்து-நீயும் வெறுத்திடாய்
விரைந்துமே கொடுப்பவன் நம்பிக்கைக்குப் பாத்திரன் 
உறைந்து-பார்த்..திருப்பவன் பார்வையாய் இருப்பவன்


எண்ணிலா கடவுளர்க்கும் கடவுள்-நீயே
அவர்-சரணம் கொள்ளும்-நல்லப் பொருளும்-நீயே
(2)
கண்ணா .. கண்ணா 

எண்ணிலா கடவுளர்க்கும் கடவுள்-நீயே
அவர்-சரணம் கொள்ளும்-நல்லப் பொருளும்-நீயே

(MUSIC)

வானம் விளங்கும்-ஓம் என்னும்-பாட்டு
கேட்டு தோற்றம்-அளிக்கும் துரியம் உந்தன்-மூச்சு
(2)
ன்னை மிஞ்சும்-திறமை எங்கும் உண்டா 
உந்தன் சரணங்களை விடவும் எதுவும் நன்றா
கண்ணா…
எண்ணிலா கடவுளர்க்கும் கடவுள்-நீயே
அவர்-சரணம் கொள்ளும்-நல்லப் பொருளும்-நீயே
(MUSIC)

பக்தரைப் போற்றுவாய் தேடி-வினையாற்றுவாய் (2)
வந்து-கொடுத்தாளுவாய் நம்பிக்கைக்கு மாலனாய் (2)
இருட்டிலும் பார்த்திடும் பார்வை
யும் நீ தான் 
பார்த்துக் காத்திடும் அந்த ஆத்துமமே தான் 
 பரம ஆத்துமம் நீ தான்

எண்ணிலா கடவுளர்க்கும் கடவுள்-நீயே 
அவர்-சரணம் கொள்ளும்-நல்லப் பொருளும்-நீயே

(2)


முதல் பக்கம்


No comments:

Post a Comment