Wednesday, January 12, 2022

24.பாம்பணையில்-பால்(வசந்தத்தில் ஓர் நாள்) **

 பாம்பணையில்-பால் 
அலையினிலே-மால்
அனந்த சயனம் கொண்டானே மாலன் ஆனந்த சயனம் கொண்டானே
(sm)
பாம்பணையில் பால் அலையினிலே மால்
அனந்த  சயனம் கொண்டானே மாலன்
ஆனந்த சயனம் கொண்டானே
மாலன் ஆனந்த சயனம் கொண்டானே
(MUSIC)

பொய்யென்ற மெய் கொண்ட பார் விளையாட்டை (2)
மோனத்தில் ரசித்திருந்தானே தானும்
பத்தவதாரங்கள் பாரெனும் மேடை 
பத்தவதாரங்கள் பாரெனும் மேடை  தனில் எடுத்தாங்கிருந்தானே மாலன்
(sm)
அழகாய்த் தானே அற்புத லீலை
அடடா தானே அற்புத லீலை
புரிந்ததில் மகிழ்ந்திருந்தானே தானே
புரிந்ததில் மகிழ்ந்திருந்தானே தானே
ரசித்ததில் மகிழ்ந்திருந்தானே
பாம்பணையில் பால் அலையினிலே மால்
அனந்த சயனம் கொண்டானே மாலன்
ஆனந்த சயனம் கொண்டானே
(MUSIC)

அந்நாளில் மாலே ஸ்ரீ ராமன் பின்னே (2)
கீதையின் கண்ணனும் மாலே என்றே
(sm)
வந்தே மகிழ்வோடு தருமத்தைப் பாரில் (2)
ஸ்தாபனம் செய்து நின்றானே மாலன்
ஸ்ரீயுடன் இங்கு யோகமும் கொண்டு (2)
நாடகம் நடத்துகிறானே மாலன்
லீலைகள் நடத்துகிறானே மாலன்
லீலைகள் நடத்துகிறானே
பாம்பணையில் பால் அலையினிலே மால்
அனந்த சயனம் கொண்டானே மாலன்
ஆனந்த சயனம் கொண்டானே
மாலன் அனந்த சயனம் கொண்டானே

முதல் பக்கம்

23. அன்பே தரும்(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே) **

அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
அவன் நாமம் உரைப்போற்கு மாறும் விதி
அந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி 
அவன் நாமம் உரைப்போற்க்கு மாறும் விதி
அந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
(MUSIC)
அந்தோ மனம் கலங்கும் வண்ணம் அடி 
தர தினம்-வந்து நமைத்-தாக்கும் இடர்ப்-பேரிடி 
(2)
சென்றோடி நம்மை விட்டுப் போகும்படி 
அய்யன் ஒரு பார்வை செய்யும் இடர் ஆகும் பொடி 
அய்யன் ஒரு பார்வை போதும் இடர் ஆகும் பொடி
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
(MUSIC)
வழி காட்டும் மறைநான்கின் கருவானவன் 
அவன் நமை-காக்கும் அருள்-ப்ரேமை உருவானவன்
(2)
என் செய்குவேன் என்று மருள்கின்றவர்
தன்னை வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவன்
கண்ணே வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவன்
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
(MUSIC)
 நமக்காக அருள்-காட்ட என்றும் இருப்பான் 
மன ஆறுதல் தான்-கொடுக்க என்றே இருப்பான்
(2)
சார்ந்தவர்க்கு பரிவை அந்த அய்யன் கொடுப்பான் 
நாம் விழுவதற்கு முன்னே நம்மை வாரி எடுப்பான்
நாம் அழுவதற்கு முன்னே வந்து கண்ணைத் துடைப்பான்
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி
அவன் நாமம் உரைப்போற்க்கு மாறும் விதி
அந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி 
அன்பே தரும் அய்யன் மாலன் விழி
என்றும் புகல்-தந்..திடும் அன்புத் தந்தை-மடி

முதல் பக்கம்

22. அலையில் சிலை-போல(மலர்ந்தும் மலராத)

அலையில் சிலை-போல அரவ அணை-மேலே உறங்கும் திருமாலனே
உந்தன் தூக்கம் கலையாமல் காலைப் பிடிக்கின்ற திருவின் மணவாளனே
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
உனதினிக்கும் பெயர்-கூறி மனதில் உருவேற்றித் தொடங்கும் உயர்யோகமே
(SM)

பேர்கள் பலகொண்டு சீர்கள் பலகொண்டு ஆட்சி புரிந்தாயய்யா புவி ஆட்சி புரிந்தாயய்யா
அந்த உயர்வின் நினைவின்றி கருவம் துளி இன்றி கல்லில் நின்றாய் அய்யா முள்ளில் நடந்தாய் அய்யா
அந்த உயர்வின் நினைவின்றி கருவம் துளி இன்றி
அந்த உயர்வின் நினைவின்றி
(vsm)
கருவம் துளி இன்றி
கல்லில் நின்றாய் அய்யா
(SM)
சிங்க அவதாரம் கொன்ற அவதாரம் என்று பயம் காட்டுவார் 
உனைச் சொல்லி பயம் காட்டுவார்
நீயும் கொன்ற செயலாலே நின்ற பெரு வாழ்வை அளித்து நிலை நாட்டுவாய் 
அன்பை  நிலை நாட்டுவாய்
நீயும் கொன்ற செயலாலே நின்ற பெரு வாழ்வை
நீயும் கொன்ற செயலாலே  (VSM)
நின்ற பெரு வாழ்வை (VSM)
 அளித்து அன்பூட்டுவாய்
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
உனதினிக்கும் பெயர்-கூறி மனதில் உருவேற்றித் தொடங்கும் உயர்யோகமே
(music)
பிறகு எனக்கூறி இறைவன் உனைப்-போற்ற மறுத்த எனைக் காக்க வா
பெயரை மறவாத ஞானம் நீ தந்து பிள்ளை எனைத் தூக்க வா
பிள்ளை எனைத் தூக்க வா
என்னை சேய்-போல உன்னை தாய் போல நினைத்து பொறுப்பாய் ஐயா
எந்தன் ஜென்மம்-கடைத்தேறும் வழியை-மறுக்காமல் அருளிச் செய்-மாலவா
அய்யே அருளிச் செய் மாலவா
ஓம்..ஓம்..

முதல் பக்கம்

Sunday, January 2, 2022

21. திருமகள் நாதன்(மலருக்குத் தென்றல்)

Aalaabanai
(SM)
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு
(SM)
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு
அலைமகள் நாதன் அருட்பேரு அதன் பொருள் அறிந்துரைத்தல் பெரும்பேறு
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு
(MUSIC)
உறுதியில் நிலைக்கும் அவன்-மேரு அவன் தரையில் பாய்ந்திடும் பேராறு (2)
படைத்ததில் எதுவும் அவன் சாறு எங்கும் அவனுக்கு உண்டோ ஒரு நேரு
சிறப்புறச் சொல்வோம் அவன் பேரு என்றும் அதற்கிணை எங்கும் கிடையாது   
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு
(MUSIC)
உருவங்கள் ஏதும் இல்லானே என மாலனை மறைகள் சொல்கிறது (2)
அவன் திருப்பேரே இலையானால் அந்த மாலனை நாம் சொல்ல முடியாது 
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு
(MUSIC)
கண்ணுக்கு மாலன் தெரியானே என பெயரால் உணர்ந்திடு நீ என்று
விண்ணுக்கு ஏகும் முன்னாலே இதைத் தந்த நல் பீஷ்மரைப் பணி நன்கு 
(sm)
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு
அலைமகள் நாதன் அருட்பேரு அதன் பொருள் அறிந்துரைத்தல் பெரும்பேறு
திருமகள் நாதன் திருப்பேரு அதைக் கூறிடல் என்பது நம் பேறு

முதல் பக்கம்

Sunday, December 12, 2021

x2. நன்கு மனதில்(தென்றலோடு உடன் பிறந்தாள்)

ஆ..

(VSM)
நன்கு மனதில் பதிந்து நின்று நிலைத்திடுமாறு
(VSM)
திருப்பெயரைப் பொருள்-புரிந்து உணர்ந்திடுமாறு
(VSM)
கேட்கையிலே விழி சுரந்து ஓடிடுமாறு
(VSM)
உரைத்திடுவோம் பக்தரெல்லாம் கேட்டிடுமாறு 
(VSM)
மனம் களித்திடுமாறு 
(VSM)
நன்கு மனதில் பதிந்து நின்று நிலைத்திடுமாறு
அவன் திருப் பெயரைப் பொருள்-புரிந்து உணர்ந்திடுமாறு
(2)
(SM)
கேட்கையிலே விழி சுரந்து ஓடிடுமாறு (2)
உரைத்திடுவோம் பக்தரெல்லாம் கேட்டிடுமாறு (2)
மனம் களித்திடுமாறு 
கருவரையில் உயிர் இருந்து பிறப்பதற்கும் 
(VSM)
சிறு-இலையும் சலசலத்து அசைவதற்கும் 
(VSM)
கல்லிருக்கும் தேரை உணவு பெறுவதற்கும்
(VSM)  
காரணமே திருமாலின் அருளாகும் திரு அருளாகும்
(VSM)
கருவரையில் உயிர் இருந்து பிறப்பதற்கும் 
சிறு-இலையும்  சலசலத்து அசைவதற்கும்
(VSM) 
கல்லிருக்கும் தேரை உண்டு வாழ்வதற்கும் (2) 
காரணமே திருமாலின் அருளாகும் 
ஒரே காரணமே திருமாலின் அருளாகும் திரு அருளாகும்
(VSM)
உலகமெல்லாம் படைத்து-அந்த பாற்கடலில்
(VSM)
பொன் மேனி ஒளி வீச ஸ்ரீதரனாய்
(VSM)
அழகுடனே பாம்பணையில் புன்னகைத்தே
(VSM)
உறங்காது உறங்குகிறான் மாலவனே நம் மாலவனே 
(VSM)
உலகமெல்லாம் படைத்து-அந்த பாற்கடலில்
பொன் மேனி ஒளி வீச ஸ்ரீதரனாய்
அழகுடனே பாம்பணையில் புன்னகைத்தே ஆ ..
அழகுடனே பாம்பணையில் புன்னகைத்தே
உறங்காது உறங்குகிறான் மாலவனே
உறங்காது உறங்குகிறான் மாலவனே நம் மாலவனே

x1. மாலன் பேரே(பாட்டும் நானே)

மாலன் பேரே கூறிடல் பேறே (2)
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே 
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே
(MUSIC)

ஊழின் வினையும் மாயம் தனையும்  
ஓட்டும் என்றிட வழி ஒன்று வேறேதோ...ஓ..
ஊழின் வினையும் மாயம் தனையும்  
ஓட்டும் என்றிட வழி ஒன்று வேறேதோ
மாலன் பேரே கூறிடல் பேறே
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே 
 (MUSIC)

அதையும்
(VSM)
இதையும் 
(VSM)
நினைக்கும் நெஞ்சே  
அதையும் இதையும் நினைக்கும் நெஞ்சே
மாலன் பெயரை ஒரு முறைக் கூறேன் 
அதையும் இதையும் நினைக்கும் நெஞ்சே
மாலன் பெயரை ஒரு முறைக் கூறேன்
எனவே பெரியோர் சொன்னார் தானே (2)
என்பதைக் கேளாய் அலையும் மனதே  
(Pause)
நா உரைத்தால் விளங்கும் பதில்கள் எல்லாமே 
(SM)
அறிவால் புரியாத ஆச்சர்யம் அதுதான்
நா உரைத்தால் விளங்கும் பதில்கள் எல்லாமே
அறிவால் புரியாத ஆச்சர்யம் அதுதான்
ஆகையாலவனின் திவ்ய நாமங்களைக் கூறலாக மனம் ஆகலாக திரு  
மாலன் பேரே கூறிடல் பேறே
கூறும் பக்தர் நா ஊறிடும் தேனே
மாலன் பேரே கூறிடல் பேறே 
(ஸ்வரம்)
....
.....

மாலன் பேரே கூறிடல் பேறே

முதல் பக்கம்

Friday, December 10, 2021

20.பார் காணவே(பூமாலையில் ஓர் மல்லிகை)

ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
உன்னைப் பாடி பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
தர்மர் கேட்டு பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
(MUSIC)

உந்தனைப் போல் ஒரு ஞானியின் ஞானி.. ஆ..ஆ..ஆ..ஆ
எங்குமுண்டோ அதைச் சொல்லிடுவாய் நீ .. ஆ..ஆ..ஆ..ஆ
உந்தனைப் போல் ஒரு ஞானியின் ஞானி
எங்குமுண்டோ அதைச் சொல்லிடுவாய் நீ 
சுவை தேன் விழுதே முழுதின் முழுதே (2)
சுவைத்தால் கரும்பே அதில்-நான் எறும்பே (2)
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
உன்னைப் பாடி பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
(MUSIC)

அம்பினில் தோன்றிடும் உன்னுயர் வீரம்  ..ஆ..ஆ..ஆ..ஆ
தென்படுமோ அதில் புவிதனில் பாவம்..ஆ..ஆ..ஆ..ஆ
அம்பினில் தோன்றிடும் உன்னுயர் வீரம்  
தென்படுமோ அதில் புவிதனில் பாவம்

திருவின் தரனே அவளின் வரனே
திருவின் தரனே அருளும் வரனே 
உயர்ந்தோர் முயன்றே அடையும் சரணே (2)
பார் காணவே பார் மீதிலே அன்று ஓர் போர் போர் மூண்டது
உன்னைப் பாடி பீஷ்மர் சொன்னது பேர் நூறின் நூறானது
உந்தன் பேர்கள் தேன் போன்றது
 (BOTH)

முதல் பக்கம்